மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சையில் ஒரு புதுயுகத்தை முன்னோடியாகக் கொண்டுவரும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்

 Apollo Cancer Centres Pioneers A New Era In Breast Cancer Surgery  


Performs South Asia's first successful Bilateral Nipple preserving Robotic Breast Surgery 



Robotic breast surgery performed in the state-of-the-art Da Vinci Xi, enabling high precision

Helps maintain the shape and contour of the breast

Improved preservation of nipple sensation 

Oncologically safe with faster return to normal life 


Chennai, March 26th, 2024 Renowned for its commitment to excellence in healthcare, Apollo Cancer Centre, Chennai (ACC), has achieved a ground-breaking surgical milestone by successfully performing South Asia's first-ever robotic nipple-sparing mastectomy with immediate reconstruction. The surgeons were able to remove the entire breast while preserving the nipple through tiny hidden incisions, enabling aesthetic outcomes for the patient.


Performed by Apollo Cancer Centres esteemed team of robotic surgical oncologists, led by Dr. Venkat P and Dr. Priya Kapoor, this innovative procedure marks a significant advancement in the field of breast cancer surgery. 


The surgery was conducted on a 37-year-old woman from Assam who was diagnosed with early-stage breast cancer and a BRCA1 mutation. Given her condition, a bilateral mastectomy with removal of both her ovaries prophylactically was required. 

Considering her age and the importance of preserving the natural appearance of her breasts, the approach chosen was a nipple-sparing mastectomy. This technique aims to minimize the impact on the patient's quality of life by preserving an essential body marker for women and ensuring a more positive post-treatment experience. 


The surgeons followed specific protocols to successfully execute this surgery. Following neoadjuvant chemotherapy, the patient opted for bilateral mastectomy and prophylactic oophorectomy. The innovative Robotic Nipple Sparing Mastectomy (NSM) with Risk-Reducing Oophorectomy was performed, utilizing tiny incisions and leveraging the advantages of robotic surgery. 


Udipti Barua (name changed on request) said, The clinicians at Apollo Cancer Centre facilitated a remarkably swift recovery, enabling me to resume my normal routine within a week after a life-altering procedure. Dr. Venkat and the team allowed me to reclaim my life with dignity, preserving my natural appearance while conquering cancer. Today, I emerge stronger and with renewed hope."


Dr. Venkat P, Senior Consultant - Surgical Oncology, ACC Chennai, expressed his optimism about the future of robotic breast surgery in India, stating, In our commitment to preserving the patient's natural breast contour, we embraced the revolutionary approach of robotic bilateral mastectomy with risk-reducing oophorectomy. This cutting-edge, robotic-assisted technique not only provided superior visualization but also minimized blood loss, improved ergonomics, and delivered outstanding cosmetic outcomes. The patient's successful & faster recovery aided for a discharge within 24 hours post-procedure.


Dr. Priya Kapoor, Consultant Surgical Oncology, ACC Chennai, said, The procedure not only removes the entire breast through discreet incisions but also increases the likelihood of preserving sensation in breast skin and nipple. The innovation goes beyond, leaving the nipple, skin, and breast intact even after surgery, preserving the entire shape of the breast. By introducing this new technique, we aim to provide our patients with the best possible cosmetic outcomes and ensure a better quality of life post-surgery.


Dr. Preetha Reddy, the Executive Vice Chairperson of Apollo Hospitals Enterprise Limited, expressed immense pride in a ground breaking achievement, stating, "It is exhilarating to witness the extraordinary triumph of our robotic surgical team, under the leadership of Dr. Venkat and Dr. Priya, in achieving South Asia's inaugural robotic bilateral nipple-sparing mastectomy, with the Da Vinci Xi. The exceptional results of this innovative surgery herald the inauguration of RoBreaS, India's premier robotic breast surgery program. Moreover, setting a new standard in surgical excellence, this effort paves the way for a future where advanced technology and compassionate care converge, igniting new hope in cancer care. At large, it is a testament to our unwavering dedication to offering superior treatment options, and make advanced healthcare much more accessible to all.


Breast cancer stands as the most prevalent cancer in women globally, and it ranks as the second leading cause of cancer-related deaths. Recognizing the increasing incidence of breast cancer, particularly in younger women, Apollo Cancer Centre has been at the forefront of adopting cutting-edge technologies to improve patient outcomes.



#WinningOverCancer


About Apollo Cancer Centres https://apollocancercentres.com/

THE CANCER CARE LEGACY: BREATHING HOPE INTO LIVES FOR OVER 30 YEARS


Cancer care today means 360-degree comprehensive care, which requires commitment, expertise, and an indomitable spirit from cancer specialists.


Apollo Cancer Centres has a network across India with over 325 oncologists to oversee the delivery of high-end precision Oncology Therapy. Our oncologists deliver world-class cancer care following an organ-based practice under competent Cancer Management Teams. This helps us in delivering exemplary treatment to the patient in an environment that has consistently delivered an international standard of clinical outcomes.


Today, people from 147 countries come to India for cancer treatment at Apollo Cancer Centres. With the first and only Pencil Beam Proton Therapy Centre in South Asia & Middle East, Apollo Cancer Centres.


For media inquiries or further information, please contact: MSL

Jagan R | jagan.rajagopalan@mslgroup.com | 9840966867

Nandagopal | nanda.gopal@mslgroup.com | 9176218089











மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சையில் ஒரு புதுயுகத்தை முன்னோடியாகக் கொண்டுவரும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்


இருபக்க முலைக்காம்புகளை பாதுகாக்கும் வெற்றிகரமான ரோபோட்டிக் அறுவைசிகிச்சை : தெற்காசியாவில் முதன்முறையாக சாதனை


மிக நவீன டா வின்சி Xi-ல் அதிக துல்லியத்திறனுடன் செய்யப்பட்ட ரோபோட்டிக் மார்பக அறுவைசிகிச்சை

மார்பகத்தின் வடிவையும் வளைவையும் தக்கவைக்க உதவுகிறது. 

முலைக்காம்பின் உணர்வை பாதுகாப்பாக தக்கவைப்பதில் மேம்பாடு 

புற்றியல் ரீதியில் பாதுகாப்பாக இயல்புவாழ்க்கைக்கு வேகமாக திரும்ப உதவுகிறது



சென்னை, - 2024, மார்ச் 26 - உடல்நல சிகிச்சையில் உயர்நேர்த்தியான சேவை மீது தனது அர்ப்பணிப்புக்காக உலகளவில் புகழ்பெற்றிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை (ACC), மார்பக புற்றை நீக்கும் சிகிச்சையில் ரோபோ உதவியுடன் முலைக்காம்பை அகற்றாமல் தக்கவைத்து உடனடியாக மறுகட்டமைப்பை மேற்கொள்ளும் தெற்காசியாவின் முதல் சிகிச்சை செயல்முறையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. மார்பக அறுவைசிகிச்சையில் புதிய பாதை படைக்கும் சாதனை என்றே இதனை கூறலாம். மறைவாக உள்ள மிகச்சிறிய கீறல்கள் வழியாக முலைக்காம்பை தக்கவைக்கும் அதே நேரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தையும் அறுவைசிகிச்சை நிபுணர்களால் அகற்றுவது இதனால் சாத்தியமாகியிருக்கிறது. நோயாளிக்கு அழகியல் ரீதியில் சிறப்பான விளைவுகள் கிடைப்பதை இந்த ரோபோட்டிக் சிகிச்சை ஏதுவாக்கியிருக்கிறது. 


டாக்டர P. வெங்கட் மற்றும் டாக்டர். பிரியா கபூர் ஆகியோர் தலைமையிலான ரோபோட்டிக் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த புதுமையான செயல்முறை, மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. 


தொடக்கநிலை மார்பக புற்றுநோய் மற்றும் ஒரு BRCA1 பிறழ்வு பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த 37 வயதான பெண்ணுக்கு இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது பாதிப்பு நிலையின் காரணமாக முற்காப்பு முறையில் அவரது இரு கருவகங்களையும் அகற்றுவதுடன் சேர்த்து இருபக்க மார்பக நீக்க சிகிச்சையும் அவசியமாக இருந்தது.


அப்பெண்ணின் வயதையும் மற்றும் அவரது மார்பகங்களின் இயற்கையான தோற்றத்தை தக்கவைப்பதின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, முலைக்காம்பை அகற்றாமல் தக்கவைக்கும் மார்பக நீக்க சிகிச்சை அணுகுமுறை மருத்துவர்கள் குழுவால் தேர்வுசெய்யப்பட்டது. பெண்களுக்கு ஒரு அத்தியாவசிய குறியீடாக இருக்கும் இதனை அகற்றாமல் தக்கவைப்பதன் மூலம் நோயாளியின் வாழ்க்கைத்தரத்தின் மீது ஏற்படும் பாதிப்பை குறைப்பதே இந்த உத்தியின் நோக்கமாகும்; அத்துடன் அறுவைசிகிச்சைக்குப்பிறகு அதிக நேர்மறையுடனான அனுபவத்தை நோயாளிக்கு உறுதிசெய்வதும் இதன் இலக்காகும். 


இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்த குறிப்பிட்ட சிகிச்சை நெறிமுறைகளை அறுவைசிகிச்சை நிபுணர்கள் பின்பற்றினர். புற்றுக்கட்டியை அகற்றுவதற்கு முன்பு ஹீமோதெரபி தரப்படும் சிகிச்சை இப்பெண்ணுக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முற்காப்பு செயல்பாடாக இரு கருவகங்களையும் மற்றும் இருபக்க மார்பகங்களையும் அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நோயாளி சம்மதித்தார். முற்காப்பு அடிப்படையில் இடரை குறைக்கும் கருவக நீக்க சிகிச்சையுடன் மார்பகத்தின் முலைக்காம்பை நீக்காமல் மார்பகத்தை மட்டும் அகற்றும் சிகிச்சையானது செய்யப்பட்டது. மிகச்சிறிய கீறல்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இச்செயல்முறையில் ரோபோட்டிக் சிகிச்சையின் சாதகங்கள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டன. 


உதிப்தி பருவா (வேண்டுகோளின்பேரில் பெயர் மாற்றப்பட்டுள்ளது) இச்சிகிச்சை குறித்து கூறியதாவது, ‘‘வாழ்க்கையையே மாற்றியமைக்கும் இந்த மருத்துவ செயல்முறைக்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் எனது வழக்கமான செயல்பாடுகளை நான் மீண்டும் மேற்கொள்வதற்கு அப்போலோ கேன்சர் சென்டரின் மருத்துவர்களின் திறன்மிக்க சிகிச்சை முறை உதவியிருக்கிறது. மார்பக புற்றுநோயை வெற்றிகொள்ளும் அதே நேரத்தில் எனது இயற்கையான தோற்றத்தை தக்கவைப்பதன் மூலம் கண்ணியத்தோடு எனது வாழ்க்கையை திரும்பப் பெறுவதற்கு டாக்டர். வெங்கட் மற்றும் அவரது குழுவினர்கள் எனக்கு உதவியிருக்கின்றனர். இன்றைக்கு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு, முன்பைவிட இன்னும் வலுவான நபராக நான் எனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறேன்.’’


இந்தியாவில் ரோபோட்டிக் உதவியுடனான மார்பக அறுவைசிகிச்சையின் எதிர்காலம் குறித்து தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்திய ACC சென்னையின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். P. வெங்கட், ‘‘நோயாளியின் இயற்கையான மார்பக அமைப்பை தக்கவைக்க வேண்டுமென்ற உறுதியான குறிக்கோள்களின் அடிப்படையில் இடர்வாய்ப்பை குறைப்பதற்காக ஒரு முற்காப்பு நடவடிக்கையாக கருவகங்களை அகற்றும் செயல்முறையுடன் ரோபோட்டிக் உதவியுடன் இருபக்க மார்பக நீக்கம் என்ற புரட்சிகரமான அணுகுமுறையை நாங்கள் இதில் மேற்கொண்டோம். இந்த நவீன, ரோபோ உதவியுடனான உத்தி மிகச்சிறப்பான பார்வைத்திறனை வழங்குவதுடன் குறைவான இரத்த இழப்பு, மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலியையும் மற்றும் மிகச்சிறப்பான அழகியல் விளைவுகளையும் சாத்தியமாக்குகிறது. இந்நோயாளி விரைவாகவும், வெற்றிகரமாகவும் இயல்புநிலைக்கு திரும்பியது, இந்த அறுவைசிகிச்சை செயல்முறையிலிருந்து 24 மணிநேரத்திற்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.’’ 


ACC சென்னையின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். பிரியா கபூர் பேசுகையில், ‘‘மிகச்சிறிய கீறல்கள் வழியாக ஒட்டுமொத்த மார்பகக் கட்டியையும் இந்த செயல்முறை அகற்றுவதோடு, மார்பகத்தின் தோலிலும் மற்றும் முலைக்காம்பிலும் உணர்வினை தக்கவைத்துக்கொள்ளும் சாத்தியத்தையும் அதிகரிக்கிறது. இந்த புதுமையான உத்தியின் காரணமாக, முலைக்காம்பு தோல் மற்றும் மார்பகம் ஆகியவை அறுவைசிகிச்சைக்குப் பிறகும்கூட அப்படியே தக்கவைக்கப்படுகிறது; அதற்கும் மேலாக மார்பகத்தின் முழுமையான வடிவமைப்பும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த புதிய உத்தியை அறிமுகம் செய்வதன் மூலம் சாத்தியமுள்ள சிறந்த அழகியல் விளைவுகளை எமது நோயாளிகளுக்கு வழங்குவதும் மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு சிறப்பான வாழ்க்கைத்தரத்தை உறுதிசெய்வதும் எமது நோக்கமாகும்’’ என்று கூறினார்.


அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் செயலாக்க துணைத்தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி, இந்த புரட்சிகர சாதனை குறித்து பெருமையையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தி கூறியதாவது, ‘‘டாக்டர். வெங்கட் மற்றும் டாக்டர். பிரியா ஆகியோரது தலைமையின்கீழ் செயல்படும் எமது ரோபோட்டிக் அறுவைசிகிச்சை குழுவின் இந்த அசாதாரண வெற்றியினை காண்பது பெருமகிழ்ச்சியையும், அளவில்லா உற்சாகத்தையும் தருகிறது. டா வின்சி Xi என்ற ரோபோ சாதனத்தின் உதவியோடு, முலைக்காம்பை நீக்காமல் தக்கவைத்துக்கொண்டு இருபக்க மார்பக கட்டியை அகற்றும் தெற்காசியாவின் முதல் அறுவைசிகிச்சை என்ற சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது. இந்த புதுமையான அறுவைசிகிச்சையின் சிறப்பான முடிவுகள், இந்தியாவின் முதன்மையான ரோபோ உதவியுடனான மார்பக அறுவைசிகிச்சை செயல்திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டிருப்பதை உரத்த குரலில் அறிவிக்கிறது. அறுவைசிகிச்சை செயல்நேர்த்தியில் புதிய தரநிலையை நிறுவியிருக்கும் இந்த முயற்சி, நவீன தொழில்நுட்பமும், கனிவான பராமரிப்பும் ஒருங்கிணைகிற ஒரு புதிய எதிர்காலத்திற்கான பாதையை அமைக்கிறது; புற்றுநோய் சிகிச்சையில் பெண் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை இது உருவாக்கியிருக்கிறது. பொதுப்படையாக பார்க்கையில், உயர்தரமான சிகிச்சையை வழங்குவதிலும் மற்றும் நவீன உடல்நல சிகிச்சையை அனைவரும் பெற்று பயனடையுமாறு ஆக்குவதிலும் எங்களது தளர்வற்ற பொறுப்புறுதிக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.’’ 


உலகளவில் பெண்களிடம் மிக அதிகமாக காணப்படும் புற்றுநோயாக இருப்பது மார்பக புற்றுநோயே. புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகளில் இரண்டாவது முன்னணி காரணமாகவும் இதுவே இருக்கிறது. மார்பக புற்றுநோய் நிகழ்வுகள் குறிப்பாக, இளவயது பெண்களில் அதிகரித்து வருவதை தெளிவாக உணர்ந்திருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர், நோயாளிகளுக்கான சிகிச்சை பலன்களை மேம்படுத்த மிக நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும், புதிய உத்திகளை பயன்படுத்துவதிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 


#புற்றுநோயை வெற்றி காண்பது


அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https://apollocancercentres.com/ 


புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக  மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.  


இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360- டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.

 

உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 325-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேச தரத்தில் சிகிச்சை விளைவுகளைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.  


இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இயங்கும் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான்  தெரபி சென்டர் என்பதைக் கொண்டிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தை வலுவாக மேற்கொள்ள தேவைப்படும் அனைத்து வசதிகளையும், திறன்களையும் பெற்றிருக்கிறது.


மேலதிக தகவல்களுக்கு அல்லது ஊடக விசாரணைகளுக்கு தொடர்புகொள்க: எம்எஸ்எல்  

S Nandagoapal | nanda.gopal@mslgroup.com | 9176218089




Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest