சென்னையில் நவ பாஷாண வராஹி அம்மன் கண் திறப்பு விழா

 

சென்னையில் நவ பாஷாண வராஹி  அம்மன்  கண் திறப்பு விழா
சென்னை மார்ச் 25:
சென்னை அரும்பாக்கம் ஜெய்நகர் 3வது தெருவில்  புதிதாக நிறுவப்பட்ட நவ பாஷாண வராஹி  அம்மன்  கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
ஶ்ரீ வராகி சித்தர் சக்தி  ஏற்பாட்டில் நிறுவப்பட இந்த நவபாஷாண வராஹி அம்மன்  கண்ணை ஶ்ரீ விபூதி சித்தர் திறந்து வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
 
 

 
 
 



இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, புதுச்சேரி , இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும்   500க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 நவ பாஷாண வாராகி  அம்மன் வழிபாட்டு தல  ஏற்பாட்டாளர் ஸ்ரீவராகி சித்தர் சக்தி    செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் கடந்த 18 ஆண்டு கால இடைவிடாத உழைப்பின் பலனாக . நவ பாஷாண வராஹி  அம்மன் சிலை உருவாக்கப்பட்டது.  
இங்கு வராஹியை தரிசனம் செய்து  . பலனடைந்த பக்தர்கள்  மூலமாக செய்தியை கேட்டு புதிதாக பக்தர்கள்  வந்த வண்ணம இருக்கிறார்கள்.
தொழில் , வணிகம், குடும்ப பிரச்சினை , உடல் சார்ந்த நோய் பிரச்சினையுடன் பல தரப்பட்ட மக்கள் தரிசனம் செய்து வராஹி அம்மன் அருளை பெற்றுச் செல்கிறார்கள்.  என்றார்.  
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டனர்.பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (TERA IMPULSE PRIVATE LTD)

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report