கவுரவமிக்க IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருதை வென்றிருக்கும்

Vellore Institute of Technology student Pragati Bhattad wins prestigious IET India Scholarship Award


Chennai 21.12.2023: The Institution of Engineering and Technology (IET), a global engineering body announces Pragati Bhattad, 4th year student of Vellore Institute of Technology as this year’s national winner of the esteemed IET Scholarship Award 2023. She received the award for her innovative solution that focused on improving healthcare with Remote Medical Procedures(RMP) by enhancing network and storage security. She successfully caught the jury’s attention for implementing blockchains, multi-factor authentication, multi-party computation, and AI driven threat intelligence to facilitate remote healthcare.


The finalists for the 7th edition of the awards were Prerna Jha from Indira Gandhi Delhi Technical University for Women, Delhi; Vignesh B.S. from Vellore Institute of Technology, Chennai; Tanushree Kadus from Cummins College of Engineering for Women, Mumbai and Tanushri Pahari from National Institute of Technology, Raipur. The winners received a combined prize money of Rs 10 lakh, certificate and IET membership. The winners were felicitated at the IET India Awards Night, which was followed by the IET President’s address, delivered by the first Indian president of IET Global, Dr. Gopichand Katragadda, 

3

Shekhar Sanyal, Country Head and Director, IET India, said, “India is currently at the precipice of an exciting digital revolution, with the youth playing a pivotal role as its architects. The IET India Scholarship Award is an embodiment of The IET's steadfast commitment to nurturing students on their path to excellence in engineering and technology. I applaud this year’s national scholarship award winner and finalists for their outstanding performance, and extend heartfelt congratulations on behalf of the IET. It is our sincere hope that this victory acts as a catalyst for them to achieve even greater heights and inspire the next generation of engineering aspirants.”


The 7th Edition of the IET Scholarship Awards saw exceptional participation from across the country, with students competing in a challenging 4- phase online assessment to evaluate their STEM fundamentals. Those who excelled in this phase were then given the opportunity to present innovative engineering solutions that revolved around social developments of India. These included topics such as “Emergency Medicare for solitary senior citizens”, “Artificial Intelligence for Sustainable farming in India”, “Digitization of Education in Rural Areas” and “Use of AI for teaching technology to elderly”.


“Today, India is at the precipice of a technology-driven revolution at a global scale, and today’s discussions and deliberations have definitely proven the same. I am immensely pleased to see the next generation of engineers actively engaging with industry experts and veterans in charting out a roadmap for future technology innovation. The finalists of this year's IET Scholarship Award have truly impressed me with their commitment to excellence. Through their innovative thinking and dedication to solving real-world issues, these young minds have illustrated the promise and possibility of engineering. I am confident that the future of India's engineering ecosystem is in safe hands. It is especially encouraging to note that this year's finalists were mostly women, marking a significant milestone for Women in Tech. We extend our heartfelt congratulations to the winner and all the finalists for their well-deserved victory.” said Prof. Abhijit Chakraborty, Chair - Scholarship Advisory Committee, IET India.


The IET India Scholarship Awards is the largest scholarship program in India for undergraduate engineering students. The initiative aims to recognize young engineering talent for their innovation, creativity, leadership and excellence. This year, the IET received more than 20,000 applications for the scholarship award. 

The IET India Scholarship Award Advisory Committee included Professor Abhijit Chakrabarti (Professor, Electrical Engineering, IIEST, Kolkata Chairman - IET India Scholarship Award 2021), Manish Bahl (Associate Vice President, Center for the Future of Work - Asia Pacific and the Middle East, Cognizant), Dr Nandini Gupta, (Professor Department of Electrical Engineering, Indian Institute of Technology (IIT), Kanpur), Professor Santosh Kumar Vora (Professor and Head of Department-Electrical Engineering, Institute of Technology, Nirma University), Professor Samarjit Sengupta (Department of Applied Physics, University of Calcutta) and Dr Shobha G (Department Of Computer Science & Engineering, R V College of Engineering).

About The IET 

The IET is one of the world’s largest engineering institutions with over 168,000 members in 150 countries. It is also the most multidisciplinary – to reflect the increasingly diverse nature of engineering in the 21st century. The IET is working to engineer a better world by inspiring, informing and influencing our members, engineers and technicians and all those who are touched by or touch the work of engineers.

Institution of Engineering and Technology - India

The IET office started operations in India in 2006, in Bangalore. Today, it has over 13,000 members and has the largest membership base for the IET outside of the UK. Given the increasing global importance of India as an engineering hub their aim is to make an impact that has relevance both locally and internationally. The strategy is to make a meaningful impact on the overall competency and skill levels within the Indian engineering community and play an influencing role with industry in relation to technology innovation and solving problems of public importance. IET does this by working in partnership with industry, academia and government, focusing on the application of practical skills within both learning & career lifecycles, driving innovation and thought leadership through high impact sectors.

For more details, please visit www.theiet.in






 கவுரவமிக்க IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருதை வென்றிருக்கும் 


விஐடி மாணவி பிரகதி பட்டாட் 


Chennai 21.12.2023 : பெரிதும் மதிக்கப்படும் IET ஸ்காலர்ஷிப் விருது 2023 – ன் இந்த ஆண்டிற்கான தேசிய அளவிலான வெற்றியாளராக வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – ன் நான்காவது ஆண்டு மாணவி பிரகதி பட்டாட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொறியியல் துறையில் உலகளாவிய அமைப்பான தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (IET) இதனை இன்று அறிவித்திருக்கிறது. வலையமைப்பையும், சேமிப்பக பாதுகாப்பையும் மேம்படுத்துவதன் மூலம் தொலைதூர மருத்துவ செயல்முறைகளைக் கொண்டு (RMP) சுகாதார பராமரிப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்துவது மீது கூர்நோக்கம் செலுத்துகிற ஒரு புதுமையான தீர்வை வழங்கியதற்காக இவ்விருது பிரகதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொலைதூர சுகாதார பராமரிப்பு சேவையை ஏதுவாக்க பிளாக்செயின்கள், பல அம்சங்களின் மூலம் சரிபார்த்து உறுதிப்படுத்துதல், பல்வேறு தரப்புகளின் கணிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும், அச்சுறுத்தல் பற்றிய நுண்ணறிவு ஆகியவற்றை அமல்படுத்தும் இத்தீர்வு, விருதுக்கான நடுவர்கள் குழுவின் கவனத்தை வெற்றிகரமாக ஈர்த்திருக்கிறது. 

 

7 - வது பதிப்பாக நடைபெற்ற இந்நிகழ்வின் இறுதிச்சுற்றுக்கு மகளிருக்கான இந்திரா காந்தி டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவி பிரேர்னா ஜா; வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை - மாணவர் பி.எஸ். விக்னேஷ்; மும்பை மகளிருக்கான கம்மிங்ஸ் பொறியியல் கல்லூரியின் மாணவி தனுஶ்ரீ கடுஸ்; மற்றும் ரெய்பூர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் மாணவி தனுஶ்ரீ பஹாரி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். வெற்றியாளர்களாக இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழும், IET – ன் உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 10 இலட்சம் என்ற ஒருங்கிணைந்த பரிசு தொகையையும் வெற்றியாளர்கள் பெற்றிருக்கின்றனர். சிறப்பாக நடைபெற்ற IET இந்தியா அவார்ட்ஸ் நைட் நிகழ்வின் போது வெற்றியாளர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து IET குளோபல் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் இந்தியரான டாக்டர். கோபிசந்த் கட்ரகாடா வழங்கிய IET தலைவரது சிறப்புரை இடம்பெற்றது.

 

IET இந்தியா அமைப்பின் இந்தியாவிற்கான தலைமை அலுவலர் மற்றும் இயக்குநர் திரு. சேகர் சன்யால், இது தொடர்பாக கூறியதாவது; “உற்சாக கிளர்ச்சியை ஏற்படுத்தும் டிஜிட்டல் புரட்சியின் நுழைவாயிலில் இந்தியா தற்போது இருக்கிறது; இதனை கட்டமைக்கும் மிக முக்கியமான பங்கை இளைய தலைமுறையினர் ஆற்றி வருகின்றனர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உயர் நேர்த்தி என்ற இலக்கை நோக்கிய அவர்களது பயணத்தில் மாணவர்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் IET கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்விற்கு எடுத்துக்காட்டாக IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது திகழ்கிறது. இந்த ஆண்டின் தேசிய ஸ்காலர்ஷிப் விருதை வென்ற மாணவி பிரகதி பட்டாட் மற்றும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற சாதனையாளர்களையும் நான் வாழ்த்துகிறேன். IET – ன் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இன்னும் உயரமான சிகரங்களை அவர்கள் எட்டி சாதனை புரிவதற்கு ஒரு செயலூக்கியாக இருக்குமென்று நாங்கள் நம்புகிறோம்; மேலும் பொறியியலில் சாதிக்க வேண்டுமென்று விரும்புகிற அடுத்த தலைமுறையினருக்கு இவர்களது வெற்றி உத்வேகம் அளிக்கும் என்பதும் எமது நம்பிக்கை.”

IET ஸ்காலர்ஷிப் விருதுகளின் 7 – வது பதிப்பு நிகழ்விற்கு நாடெங்கிலுமிருந்து மாணவ, மாணவியரின் உற்சாகமான பங்கேற்பு காணப்பட்டது. STEM – ல் அவர்களது அடிப்படை திறன்களை மதிப்பிடுவதற்கு நான்கு கட்டங்களாக ஆன்லைன் முறையில் ஒரு சவால் மிக்க மதிப்பாய்வில் இம்மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தங்கள் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியவர்களுக்கு இந்தியாவின் சமூக முன்னேற்றத்திற்கு புதுமையான பொறியியல் தீர்வுகளை கண்டறிந்து சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. “தனித்து வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு அவசரநிலை மருத்துவ சிகிச்சை”, “இந்தியாவில் வளம் குன்றா வேளாண்மைக்காக செயற்கை நுண்ணறிவு”, “கிராமப்புற பகுதிகளில் கல்வியை டிஜிட்டல் மயமாக்கல்” மற்றும் “முதியோருக்கு தொழில்நுட்பத்தை கற்பிக்க செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு” போன்றவை இதற்காக வழங்கப்பட்டிருந்த தலைப்புகளுள் சிலவாகும். 


“உலகளவில் தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் புரட்சியின் நுழைவாயிலில் இன்றைக்கு இந்தியா இருக்கிறது. இன்று நடைபெற்றிருக்கும் விவாதங்களும், கலந்துரையாடல்களும் இதை நிச்சயமாக நிரூபித்திருக்கின்றன. எதிர்காலத்தின் தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கான செயல்திட்டத்தை வகுப்பதில் தொழில்துறையின் நிபுணர்களோடும், அனுபவமிக்க சாதனையாளர்களோடும் அடுத்த தலைமுறை பொறியியளாலர்கள் ஆர்வத்தோடு தீவிரமாக ஈடுபடுவதை காண்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டின் IET ஸ்காலர்ஷிப் விருதிற்கான போட்டியின் இறுதிச்சுற்றில் இடம்பெற்றவர்கள், வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும், திறனும் என்னை உண்மையிலேயே பிரமிக்கச் செய்திருக்கிறது. நிஜ உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இவர்களது புதுமையான சிந்தனை மற்றும் அர்ப்பணிப்பு வழியாக பொறியியளால் அதிகம் சாதிக்க முடியுமென்ற சாத்தியத்தையும், நம்பிக்கையையும் இந்த இளம் சிந்தனையாளர்கள் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்தியாவின் பொறியியல் சூழல் அமைப்பின் எதிர்காலம் பாதுகாப்பான தரங்களில் இருக்குமென்ற நம்பிக்கை இதனால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதை காண்பது கூடுதல் ஊக்கமளிக்கிறது; தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இவ்விருதின் வெற்றியாளருக்கும் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களின் சிறப்பான திறமைக்கும், வெற்றிக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுதல்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று IET இந்தியாவின் ஸ்காலர்ஷிப் ஆலோசனை குழுவின் தலைவர் பேராசிரியர் அபிஜித் சக்கரவர்த்தி கூறினார்.


இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ஸ்காலர்ஷிப் செயல்திட்டமாக IET இந்தியா ஸ்காலர்ஷிப் அவார்டு இருந்து வருகிறது. இளம் பொறியியல் மாணவர்களது புத்தாக்கம், படைப்பாக்கத்திறன், தலைமைத்துவ பண்பு மற்றும் செயல் நேர்த்தி ஆகியவற்றை அங்கீகரித்து ஊக்குவிப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். இந்த ஆண்டு ஸ்காலர்ஷிப் விருதுக்காக 20,000 – க்கும் அதிகமான விண்ணப்பங்களை IET பெற்றிருந்தது. 

IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது ஆலோசனை குழுவில் பேராசிரியர் அபிஜித் சக்கரவர்த்தி (பேராசிரியர், மின் பொறியியல், IIEST, கொல்கத்தா – தலைவர் - IET ஸ்காலர்ஷிப் விருது 2021), மணீஷ் பஹல் (இணை துணை தலைவர், சென்டர் ஃபார் த ஃப்யூட்சர் ஆஃப் வொர்க் – ஆசியா பசிஃபிக் மற்றும் மத்திய கிழக்கு, காக்னிசண்ட்), டாக்டர். நந்தினி குப்தா, (பேராசிரியர் – மின் பொறியியல் துறை, ஐஐடி கான்பூர்), பேராசிரியர் சந்தோஷ் குமார் வோரா (பேராசிரியர் & துறை தலைவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, நிர்மா பல்கலை), பேராசிரியர் சமர்ஜிட் சென்குப்தா (பயன்முறை இயற்பியல் துறை, கொல்கத்தா பல்கலை), டாக்டர் ஷோபா ஜி (கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, ஆர் வி பொறியியல் கல்லூரி) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


IET குறித்து 

150 நாடுகளில் 168,000 உறுப்பினர்களை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய பொறியியல் துறை அமைப்புகளுள் ஒன்றாக IET இயங்கி வருகிறது. 21 – வது நூற்றாண்டில் பொறியியலில் பன்முகத்தன்மை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு துறைகளை அதிகம் உள்ளடக்கிய அமைப்பாகவும் இது இருக்கிறது. பொறியியளாலர்களால் பயன் பெற்றிருக்கிற அல்லது அவர்களது பணியோடு தொடர்புடைய அனைத்து நபர்கள், எமது உறுப்பினர்கள், பொறியியளாலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு உத்வேகமும், தகவலும் அளித்து தாக்கம் ஏற்படுத்துவதன் வழியாக ஒரு சிறப்பான உலகை உருவாக்க IET பணியாற்றி வருகிறது. 

இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி – இந்தியா 

IET அலுவலகம் 2006 – ம் ஆண்டில் இந்தியாவில் பெங்களூரு நகரில் தனது செயல்பாட்டை தொடங்கியது. இன்றைக்கு 13,000 – க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டிருக்கும் இந்த அமைப்பு, யுகே – க்கு வெளியே IET அமைப்பிற்கு மிக அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் பெருமைக்குரியதாக வளர்ந்திருக்கிறது. பொறியியல் செயல்பாடுகளின் மையமாக இந்தியா உலகளவில் வளர்ந்து வருவதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் நிலையில், உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்குவது இந்த அமைப்பின் நோக்கமாகும். இந்திய பொறியியல் சமூகத்திற்குள் பொறியியளாலர்களது ஒட்டுமொத்த செயல்தகுதி மற்றும் திறன்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்துவதே இந்த அமைப்பின் செயல் உத்தியாக இருந்து வருகிறது. இதன் மூலம் பொது சமூகத்திற்கு முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் மற்றும் புத்தாக்க தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பாகவோ தொழில்துறை மீது தாக்கம் ஏற்படுத்தும் பணியை இந்த அமைப்பு செய்து வருகிறது. தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றோடு கூட்டுவகிப்போடு செயல்படுவதன் வழியாக இதனை IET செய்து வருகிறது; கற்றல் மற்றும் கரியர் காலங்கள் ஆகிய இரண்டிலும் நடைமுறை செயல்திறன்களின் பயன்பாடு மீது கவனம் செலுத்தி வரும் IET, அதிக மாற்றம் ஏற்படுத்தும் துறைகளின் வழியாக புத்தாக்கத்தையும், சிந்தனை தலைமைத்துவத்தையும் முன்னிலைப்படுத்தி ஊக்குவிக்கிறது. 

அதிக விவரங்களுக்கு தயவுசெய்து காணவும்; www.theiet.in

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest