Kauvery Hospital, Radial Road, Launches “Institute of Brain & Spine”
Kauvery Hospital, Radial Road, Launches “Institute of Brain & Spine”
21st August 2023, Chennai: The Institute of Brain & Spine was launched at Kauvery Hospital, Radial Road. It was inaugurated by Thiru K. N. Nehru, Hon’ble Minister for Municipal Administration, Urban and Water Supply, Government of Tamil Nadu. With an increase in incidences of stroke and neurological disorders in the society, the Institute offers best-in-class infrastructure, state-of-the-art equipment and an expert team of specialist doctors delivering desired clinical outcomes that improves the quality of life to all its patients.
The institute comprises the departments of Brain and Spine Surgery, Neurology (Adult and Paediatric), Neuro Anaesthesiology and Neuro Critical Care, Neuro Intervention and Radiology as well as Neuro Behaviour and Neuro Rehabilitation. These departments work in synergy to set new standards in holistic neurological care. The experienced neurologists provide solutions to complex neurological problems like brain tumours, epilepsy, movement disorders, etc., even in advanced stages of the disease. The chief guest appreciated the advanced infrastructure and facilities available at the Institute of Brain & Spine.
Dr. Chandrakumar, Founder and Executive Chairman of Kauvery Group of Hospitals, said, “Kauvery Hospitals is focussed on building a centre for Neurosciences with world-class infrastructure and a competent team of expert clinicians. The centre has the latest equipment such as 3T MRI, Three-Dimensional 4K Operating Microscope, Continuous Perioperative Invasive and Non-invasive Neuro Monitoring Systems and Neuro Critical Care beds. It performs complex brain and spine surgeries, offers protocol-driven stroke and trauma management and provides a comprehensive rehabilitation program. Our focus shall also be to build on the academic and research programs around epilepsy and movement disorders.”
“Keeping in mind that successful treatment starts with precise diagnosis, the experts use the latest technology for accurate analysis. Patients will benefit from the advanced care available here, including life-saving and technically demanding procedures. Our expert team of specialists are proficient at treating complex and severe conditions with excellent clinical outcomes,” remarked Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director of Kauvery Group of Hospitals.
“Operating around the clock, our institute is well-prepared to manage complex neurological emergencies and cases on par with international benchmarks. The institute’s proficient team brings together years of experience and expertise, fortified by exceptional facilities and research-driven protocols, to deliver the best outcomes and improve the quality of life of our patients with any neurological problem or emergency,” said Dr. K. Sridhar, Group Mentor and Director, Neurosciences Kauvery Hospital Radial road .
With the launch of Institute of Brain and Spine, Kauvery Group of Hospitals continues its legacy of excellence in offering world-class medical services with a personal touch and dedication to redefine healthcare standards.
*Dr. K. Sridhar* , Group Mentor and Director, Neurosciences Kauvery Hospital Radial road , *Dr. Aravindan Selvaraj* , Co-Founder & Executive Director of Kauvery Group of Hospitals, *Thiru I. Periyasamy* , Hon’ble Minister, Rural Development Govt of Tamil Nadu, *Thiru K. N. Nehru* , Hon’ble Minister for Municipal Administration, Urban and Water Supply, Government of Tamil Nadu, *Dr.Manivannan* Founder and Managing Director,
*Dr. Chandrakumar* , Founder and Executive Chairman of Kauvery Group of Hospitals
காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில்
“மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு” தொடக்கம்
21st ஆகஸ்ட் 2023, சென்னை: சென்னை – ரேடியல் ரோட்டில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர்வழங்கல் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் இப்பிரிவினை திறந்து வைத்தார். பக்கவாதம் மற்றும் மூளை – நரம்பியல் கோளாறுகள் சமுதாயத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை பாதித்து வருகின்ற நிலையில், நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையின் மூலம் குணமளிப்பதற்கு இங்கு அனுபவம் மிக்க, சிறப்பு மருத்துவர்களின் நிபுணர் குழு செயலாற்றுகிறது. அத்துடன், நவீன மருத்துவ சாதனங்களும், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளும் நிறுவப்பட்டிருப்பது, சிகிச்சையின் பலன் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது.
இப்பிரிவில் மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை, மூளை நரம்பியல் (வயது வந்தோர் மற்றும் குழந்தைகளுக்கான), நரம்பியல் சார்ந்த அனஸ்தீசியா மற்றும் நரம்பியல் சார்ந்த தீவிர சிகிச்சை, மருத்துவ செயல்முறைகள் மற்றும் கதிர்விச்சு சிகிச்சை, மூளை நரம்பியல் சார்ந்த நடத்தைகள் மற்றும் நரம்பியல் மறுவாழ்வு என பல்வேறு சிறப்புத் துறைகள் உள்ளன. முழுமையான நரம்பியல் சிகிச்சை வழங்குவதில் புதிய தரநிலைகளை நிறுவும் குறிக்கோளோடு இந்த துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன. மூளை கட்டிகள், கால்-கை வலிப்பு, நகர்வு கோளாறுகள் உட்பட பல்வேறு நரம்பியல் பாதிப்புகளுக்கும், நோய் முற்றிய நிலையிலும் கூட தீர்வுகளை வழங்குகின்றனர். இங்கு நிறுவப்பட்டுள்ள மிக நவீன சாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதியை பார்வையிட்ட தலைமை விருந்தினரான மாண்புமிகு அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்டினார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர். ச. சந்திரகுமார் இது தொடர்பாக கூறியதாவது: “உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடனும் திறமையான நிபுணர்கள் குழுவோடு இணைந்து, மூளை – நரம்பு அறிவியல் துறைக்கான உயர் சிகிச்சை பிரிவினை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. தொடங்கப்பட்டுள்ள 3T MRI, 3D–4K இயக்க திறனுள்ள நுண்ணோக்கி, தொடர்ச்சியான அறுவைசிகிச்சைக்கால ஊடுருவல் மற்றும் ஊடுருவல் அல்லாத சிகிச்சைக்கான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் நரம்பியல் நோயாளிகளுக்கான உயிர்காப்பு தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை உட்பட, தேவையான அனைத்து வசதிகள் மற்றும் மிக நவீன சாதனங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இச்சிகிச்சை பிரிவு, மிக நுட்பமான மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளை மேற்கொள்கிறது; பக்கவாதம் (ஸ்ட்ரோக்) மற்றும் விபத்துக்காய சிகிச்சை மேலாண்மையையும் மற்றும் விரிவான மறுவாழ்வு செயல்திட்டத்தையும் திறம்பட செயல்படுத்துகிறது. கால்-கை வலிப்பு மற்றும் நகர்வு கோளாறுகள் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களை நடத்துவது எங்களது நோக்கமாக இருக்கும்.”
“வெற்றிகரமான சிகிச்சை, துல்லியமான நோயறிதல் முறையில் இருந்து தான் தொடங்குகிறது என்பதால், நோயின் பாதிப்பை அறிய துல்லியமான பகுப்பாய்விற்கு மிக நவீன தொழில்நுட்பத்தை எமது மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர். மருத்துவ ரீதியில் அதிக சிக்கலான செயல்முறைகள் மற்றும் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நுட்பமான சிகிச்சைகள் உட்பட, இங்கு கிடைக்கக்கூடிய உயர் தரத்திலான மேம்பட்ட சிகிச்சையின் மூலம் நோயாளிகள் சிறப்பான சிகிச்சைப் பலன்களை பெற முடியும். அதிக சிக்கலான மற்றும் தீவிர பாதிப்பு நிலைகளில் நோயாளிகள் சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்ற நிலையிலும் நேர்த்தியான சிகிச்சையின் மூலம் அவர்களை குணப்படுத்தும் திறன் உள்ள அனுபவம் மிக்க எமது சிறப்பு நிபுணர்களின் குழு இருக்கிறது.” என்று காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனரும், செயல் இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
“சர்வதேச தரநிலைகளுக்கு நிகராக, மிக சிக்கலான மூளை – நரம்பியல் அவசர நிலைகளையும், விபத்து காய நேர்வுகளையும் கையாள்வதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் எமது இந்த பிரிவு செயல்படுகிறது. சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்க அனுபவமும், நிபுணத்துவமும் உள்ள மருத்துவர்கள் குழுவிற்கு இங்கு கிடைக்கக்கூடிய சிறப்பான வசதிகள் மற்றும் நிறுவப்பட்டுள்ள ஆராய்ச்சி அடிப்படையிலான நெறிமுறைகள் உதவுகின்றன. மூளை நரம்பியல் சார்ந்த எந்தவொரு பிரச்சனை அல்லது அவசர நிலையிலுள்ள நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை சிகிச்சையின் மூலம் மேம்படுத்துவதில் நாங்கள் வலுவான உறுதியும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்கிறோம்.” என்று நரம்பியல் துறையின் குழும வழிகாட்டி மற்றும் இயக்குனர், டாக்டர். கே. ஸ்ரீதர் கூறினார்
மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவினை தொடங்கியிருப்பதன் மூலம் உலகத் தரத்தில் தனிப்பட்ட அக்கறை, கனிவான கவனிப்பு, அர்ப்பணிப்புள்ள சேவையின் மூலம் நேர்த்தியான சிகிச்சையை வழங்கும் தனது பாரம்பரியத்தை தொடர்வதை காவேரி மருத்துவமனை குழுமம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
Comments
Post a Comment