கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 தொடர்கள்- பேரழகி 2 மற்றும் அர்ச்சனைப் பூக்கள்

 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 தொடர்கள்- பேரழகி 2 மற்றும் அர்ச்சனைப் பூக்கள்


ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.












சென்னை, ஜூன் 28, 2023: வயாகாம் 18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தற்போது புதிய 2 தொடர்களை சின்னத்திரைக்குக் கொண்டு வருகிறது.  விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான பிணைப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பேரழகி 2, அர்ச்சனைப் பூக்கள் - இரு சகோதரிகளின் கதை ஆகிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த இரண்டும் கன்னடத்தில் ஹிட்டான லக்சனா மற்றும் பாக்யலஷ்மி ஆகிய தொடர்களின் டப்பிங் வெர்ஷனாகும். இந்த 2 தொடர்புகளும் ஜூலை 3-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளன.


பேரழகி 2 தொடரானது நக் ஷத்ரா(நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார் மற்றும் ஸ்வேதா(சுக்ருதா நாக் நடித்துள்ளார்) ஆகிய 2 பெண்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. இந்த 2 குழந்தைகளையும் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார். இதில் நக் ஷத்ரா கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை துகாராமா மற்றும் அவரது தாயாரால் ஏற்றுக் கொள்ளவில்லை. தானும் தனது மனைவி ஜெயாவும் நல்ல சிவப்பு நிறத்தில் இருப்பதால் , நக் ஷத்ரா தன்னுடைய மகளாக இருக்க முடியாது என்று அவரது தந்தை எண்ணுகிறார்.  இதை நக் ஷத்ரா ஒரு புன்னகையுடன் சகித்துக் கொண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால் இங்கும், அவரது கருப்பு நிறத்தால் தோல்வி காண்கிறார். இறுதியில் ஸ்வேதா நடிக்கும் நிகழ்ச்சியில், அவருக்கு குரல் தரும் பெண்ணாக வேலை பார்க்கிறார் நக் ஷத்ரா. இதனிடையே, சகுந்தலா தேவியின் (சுதே பெளவாடி) மகனான பூபதி (ஜெகன்னாத் சி) எம்பிஆர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். இவர் நக் ஷத்ராவின் வீட்டில் தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்டாமல் பேயிங் கெஸ்ட்டாக தங்கியுள்ளார். டி.வி.யில் வரும் ஸ்வேதாவின் குரலில் மயங்கிய பூபதி, அது நக் ஷத்ராவின் குரல் என்று தெரியாமலேயே காதலிக்க ஆரம்பிக்க பிரச்சினை உருவாகிறது. பல்வேறு திருப்பங்கள், ட்விஸ்டுகளுக்குப் பின்னர் நக் ஷத்ரா கருப்பாக இருந்தபோதிலும் அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார் பூபதி. இதே நேரத்தில் நக் ஷத்ராவும், ஸ்வேதாவும் தங்களது உண்மையான பெற்றோரை சந்திக்கின்றனர். பல்வேறு திருப்பங்கள், சுவாரஸ்யங்கள் கொண்ட இந்த பேரழகி 2 தொடரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு காணுங்கள்...


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பேரழகி 2 ஒளிபரப்பாவது குறித்து நடிகை விஜயலஷ்மி கூறியதாவது:

கன்னடத்தில் வந்த லக் ஷனா தொடரானது என்னுடைய முதல் தொடராகும். இந்தத் தொடர் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது எனக்கு திரில்லிங்கை தருகிறது. இதன்மூலம் எனக்கு புதிய பார்வையாளர்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


அர்ச்சனை பூக்கள் - இரு சகோதரிகளின் கதை என்ற தொடரானது வெவ்வெறு வயது கொண்ட பெண்களைப் பற்றிய கதையாக அமைந்துள்ளது. கணவர் தாண்டவ் (சுதர்ஷன் ரங்கபிரசாத்) திட்டுவதாலும், மோசமாக நடத்துவதாலும் பாக்யாவின் (சுஷ்மா கே.ராவ் நடித்துள்ளார்) வாழ்க்கை ஆரம்பம் முதலே நரகமாக உள்ளது. இருப்பினும், பாக்யா அதை ஒரு புன்னகையுடன் கடந்து செல்கிறார். அமைதியாக இருந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் பராமரிக்கிறார். மேலும் மாமன் மகளான அனாதைப் பெண்ணான லஷ்மியை (பூமிகா ரமேஷ்) தனது சொந்த சகோதரியைப் போலவே வளர்க்கிறார். மேலும், லஷ்மிக்கு ஏற்ற நல்லவரைத் தேர்வு செய்து திருமணம் செய்யவும் முடிவு செய்கிறார். இதனிடையே பாக்யாவின் வாழ்க்கை மோசமான நிலையை அடையவே, எதிர்பாராத இடங்களில் இருந்து அவருக்கு உதவி வருகிறது. பாக்யாவின் உரிமைகளைப் பெற அவரது மாமியார் அவருக்குத் துணை நிற்கிறார். லஷ்மிக்கு நல்ல கல்வியைத் தருவதற்கும், தனது காலில் சுயமாக நிற்பதற்கும், அக்காள்-தங்கை இடையே பிணைப்பை ஏற்படுத்தவும் மாமியார் உதவுகிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 3 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அர்ச்சனை பூக்கள் தொடரைக் காணுங்கள்.


தொடர் குறித்து நடிகை சுஷ்மா கே. ராவ் கூரும்போது, “இந்தத் தொடரின் அனுபவத்தை தமிழக ரசிகர்கள் பெறுவார்கள் என்று எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  கதையின் களம், அதிலுள்ள கதாப்பாத்திரங்களால் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்" என்றார்.

ஜூலை 3-ம் தேதி முதல் இரவு 8.30 மணி முதல் இந்த புதிய தொடர்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணுவதற்கு மறக்காதீர்கள். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் டிடிஎச்-சில் கிடைக்கிறது. சன் டைரக்ட் (சேனல் எண் 128), டாடா ஸ்கை (சேனல் எண் 1515), ஏர்டெல் (சேனல் எண் 763), டிஷ் டீவி (சேனல் எண் 1808), வீடியோகான் டி2எச் (சேனல் எண் 553) மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் காணலாம்.


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி குறித்து:

வயாகாம் 18 நிறுவனத்தின் அங்கமான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு சேனல் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி  உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் ரசிகர்ளை மகிழ்விக்கும் விதமாக தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தொடர்களைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்குவித்தல், கொண்டாட வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஸ்டீரியோடைப் நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல், முற்போக்கு எண்ணம் கொண்ட நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தல், சமகால நிகழ்ச்சிகளை நடத்துவதில் கலர்ஸ் தமிழ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.


வயாகாம்18 குறித்து:

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு நெட்வொர்க் நிறுவனங்களில் வயாகாம்18 மீடியா தனியார் நிறுவனமும் ஒன்று.                                  

பல்வேறு தளம், பல தலைமுறை மற்றும் பல்வேறு கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வரும் தளமாக வயாகாம்18 மீடியா உள்ளது.

வயாகாம் 18 இந்தியாவில் பொழுதுபோக்கை வரையறுக்கிறது. ஆன்-ஏர், ஆன்லைன், தரைவழி, சினிமாக்கள் மற்றும் வணிகப் பொருட்கள் மூலம் மக்களின் வாழ்க்கையைத் தொடுகிறது வயாகாம்18. பொது பொழுதுபோக்கு, திரைப்படங்கள், விளையாட்டு, இளைஞர்கள், இசை மற்றும் குழந்தைகள் வகைகளில் 38 தொலைக்காட்சிகளைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள நுகர்வோரை மகிழ்விக்கிறது. வயாகாம்18-ன் ஓடிடி இயங்குதளமான ஜியோசினிமா இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும், நேரலை விளையாட்டுகளுக்கான மிகவும் பிரபலமான தளமாக உள்ளது. வயாகாம்18 ஸ்டூடியோஸ் இந்தியாவில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக  ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும்  பிராந்திய அளவிலான திரைப்படங்களை வெற்றிகரமாக தயாரித்து விநியோகித்துள்ளது.

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest