Athulya Senior Care Launches Dementia Care Services in Chennai
Chennai, 30th May 2023: Athulya Senior Care Launches Dementia Care Services , at the launch from ( L to R ) G. Srinivasan, Founder & CEO, Athulya Senior Care; Dr. Karthik Narayan, Founder & MD, Athulya Senior Care; Tmt. P Geetha Jeevan, Honourable Minister for Social Welfare & Women Empowerment, Government of Tamil Nadu and Kavya J,Co- founder & Director Marketing , Athulya Senior Care
Athulya Senior Care, a prominent name in India's senior care landscape, proudly announced the launch of their revolutionary Dementia Care Services at Pallavaram, Chennai. This landmark event was marked by the esteemed presence of Tmt. P Geetha Jeevan, Honourable Minister for Social Welfare & Women Empowerment, Government of Tamil Nadu. Sharing the dais were Dr. Karthik Narayan, Founder & MD, Athulya Senior Care, and G. Srinivasan, Founder & CEO, Athulya Senior Care.
Marking a key expansion to Athulya’s rapidly growing senior care infrastructure, the addition of Dementia Care services augments the wide range of senior care service being provided across Athulya Senior Care facilities spanning 1,000+ beds. It is a testament to Athulya's steadfast commitment to providing holistic, specialized care for seniors grappling with serious conditions such as dementia.
Athulya Dementia Care Service brings together a multidisciplinary approach that caters to the physical, emotional, and cognitive needs of seniors. With a dedicated team of seasoned doctors and nurses, they are adept at managing various forms of dementia, including Alzheimer's, Vascular Dementia, Lewy Body Dementia, and Frontotemporal Dementia.
Speaking about the new service, G. Srinivasan, Founder & CEO, remarked, "Our goal is to create an atmosphere of warmth, security, and understanding. We are here to care for those who once cared for us, and that's a responsibility we don't take lightly."
Dr. Karthik Narayan, Founder & MD, reiterated Athulya's mission: "We are committed to delivering comprehensive, personalized care plans for each of our residents. We aim to foster an environment where they can maintain their dignity, enjoy engaging activities, and receive the highest standard of medical care."
Delving into the significance of the dementia care services, Dr. Narayan explained, "Dementia is not just about forgetting things. It's a condition that impacts the person's daily life and even alters their personality. At Athulya, we are here to provide all-round support – medical, emotional, and social. Our approach is not just to care but to connect, understand, and empower."
Athulya Dementia Care stands for transparency in communication, alleviation of symptoms, and an unwavering focus on treatments designed to improve overall well-being and the quality of life for residents. With its safe and homely environment, engaging activities, personalized care plans, and compassionate care, Athulya sets the gold standard in dementia care.
About Athulya Senior Care
Headquartered in Chennai, Athulya Senior Care is a premier provider of senior care services in India. With a capacity of 1,000 beds and an ever-growing network of facilities, Athulya delivers a broad spectrum of specialized senior care services.
For more information about Athulya Senior Care and its services visit : www.athulyaseniorcare.com
சென்னையில் அதுல்யா சீனியர் கேர்
அறிவாற்றல் இழப்பு (டிமென்ஷியா) நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது
சென்னை, 30 மே 2023 – இந்தியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட பெயரான அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தால், சென்னை, பல்லாவரத்தில், புதிய அறிவாற்றல் இழப்பு நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவைகள் துறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் மாண்புமிகு அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதுல்யா சீனியர் கேரின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண், நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போது, அறிவாற்றல் இழப்பு நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், 1,000+ படுக்கை வசதிகளை உள்ளடக்கிய அதுல்யா முதியோர் பராமரிப்புக் கட்டமைப்புகள் முழுவதும் வழங்கப்படும் பலதரப்பட்ட முதியோர் பராமரிப்புச் சேவைகளின் அளவு மேலும் ஒரு படி மேம்படுத்தப்பட்டுள்ளது, இது நிறுவனத்தின் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளுக்குக் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கொடுத்துள்ளது. அறிவாற்றல் இழப்பு போன்ற கடுமையான நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு முழுமையான, சிறப்புப் பராமரிப்பை வழங்குவதில் அதுல்யாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது.
அறிவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான பராமரிப்புச் சேவைகள் பயன்படுத்தும் பலதுறை அணுகுமுறையால் முதியவர்களின் உடல், உணர்வு மற்றும் அறிவாற்றல் சார்ந்த தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அல்சைமர் நோய் (முதுமையில் ஏற்படும் மூளைத் தளர்ச்சி, மறதி முதலிய கோளாறுகள்), வாஸ்குலர் டிமென்ஷியா (மூளையின் இரத்தக்குழல்களுக்கு ஏற்படும் சேதத்தால் உண்டாகும் அறிவாற்றல் இழப்பு), லூயி பாடி டிமென்ஷியா (மூளையில் அதிகப்படியாகத் திரளும் புரதத்தால் உண்டாகும் அறிவாற்றல் இழப்பு) மற்றும் ஃப்ரன்ட்டோடெம்போரல் டிமென்ஷியா (மண்டை முன் மற்றும் பொட்டு எலும்புப் பகுதியில் உள்ள செல்கள், திசுக்களின் சேதத்தால் உண்டாகும் அறிவாற்றல் இழப்பு) உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் இழப்புகளைத் திறம்படக் கையாளுவதில் திறமையான, அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் அடங்கிய அர்ப்பணிப்புமிக்க மருத்துவக் குழு அதுல்யா சீனியர் கேரில் இயங்குகிறது.
இந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜி.சீனிவாசன், புதிய சேவை குறித்துக் கூறுகையில், "அரவணைப்பு, பாதுகாப்பு மற்றும் புரிதல் நிறைந்த சூழலை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் ஆகும். ஒரு காலத்தில் நம்மைக் கவனித்தவர்களைக் கவனிக்க வேண்டிய கடமையை நாங்கள் கண்ணும் கருத்துமாக, பொறுப்பான அக்கறையுடன் நிறைவேற்றுகிறோம்; அதற்காகவே நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
அதுல்யாவின் செயலிலக்கு பற்றி அதன் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண் மேலும் கூறுகையில்: "இங்கு சிகிச்சை பெறும் அறிவாற்றல் இழப்பு நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் விரிவான, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புத் திட்டங்களை வழங்குவதில் நாங்கள் பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். அவர்கள், தங்கள் கண்ணியத்தைக் காத்துக்கொள்ளவும், ஊக்கமளிக்கும் செயல்களில் பங்கேற்று மகிழ்ச்சியாக இருக்கவும், உயரிய செந்தரமான மருத்துவப் பராமரிப்பைப் பெறவும், சிறந்த சூழலை வழங்குவதே எங்கள் நோக்கம் ஆகும்,” என்று குறிப்பிட்டார்.
அறிவாற்றல் இழப்பு பாதிப்புகளின்போது பராமரிப்பு சேவைகளின் தேவை பற்றி டாக்டர் நாராயண் விரிவாகக் கூறுகையில், "அறிவாற்றல் இழப்பு என்பது விடயங்களை மறந்துவிடுவது மட்டுமல்ல; இந்த நோய் ஒருவரின் அன்றாட செயல்பாடுகளில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது மற்றும் அவரது ஆளுமையைக் கூட இது மாற்றிவிடலாம். அதுல்யாவில் நாங்கள் உடல், உணர்வு மற்றும் சமூகம் சார்ந்த பராமரிப்பு உட்பட முழுமையான ஆதரவை நோயாளிகளுக்கு வழங்குகிறோம். எங்களின் அணுகுமுறையானது, நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதுடன், மேலதிகமாக அவர்களுடன் அன்பான உறவை உண்டாக்குதல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
அறிவாற்றல் இழப்பு பாதிப்புகளுக்கான பராமரிப்புச் சேவைகள் என்பது நோயாளிகளுடன் வெளிப்படையான தகவல்தொடர்பு, நோயின் அறிகுறிகளைத் தணித்தல் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளில் இடைவிடாமல் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அறிவாற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளநோயாளிகளுக்கு பராமரிப்பு சேவை வழங்குவதில்அதுல்யா முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆகும். இங்கு சிகிச்சை பெறும் நேயாளிகளுக்கு அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்பான சூழல், அவர்களை ஆர்வமுடன் பங்கேற்கச் செய்யும் செயல்பாடுகள், ஒவ்வொரு நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புத் திட்டங்கள், கனிவுடன்கூடிய அக்கறை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்தத் துறையில் தங்கமான உயரிய செந்தர அளவுகோல்களை முன்மாதிரியாக நிர்ணயிப்பதில் அதுல்யா பெருமை கொள்கிறது.
Comments
Post a Comment