கோடை வெப்பத்தை சமாளிக்க, B Natural அறிமுகப்படுத்துகிறது புத்துணர்ச்சியூட்டும் இளநீர்
கோடை வெப்பத்தை சமாளிக்க, B Natural அறிமுகப்படுத்துகிறது புத்துணர்ச்சியூட்டும் இளநீர்
சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் எதுவும் சேர்க்கப்படாத, B Natural இளநீர், இந்த கோடையில் நுகர்வோர்கள் கொளுத்தும் வெயிலை சமாளித்து நீர்ச்சத்துடன் இருக்க உதவக்கூடியது.
சென்னை: ITC Ltd.-ன் மிகவும் விரும்பப்படும் மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகளில் ஒன்றான B Natural Juices & Beverages, இயற்கையின் சிறந்த புத்துணர்ச்சியை சிறிய பாட்டிலில் அடைத்து வழங்கும் தனது முயற்சியின் அடுத்த கட்டமாக தற்போது இந்தியா முழுவதும் பேக்கேஜ் செய்யப்பட்ட இளநீரை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், நுகர்வோர் தங்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் பானங்களை இணையங்களில் அதிகளவில் தேடியிருக்கிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. B Natural-ன் இளநீர், உடலில் நீர்ச்சத்தை வற்றாமல் பாதுகாத்து, சுட்டெரிக்கும் கோடையில் இருந்தும் நிவாரணம் அளிக்கக் கூடிய ஓர் சிறந்த பானமாகும். இதில் சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை மற்றும் இயற்கையாகவே கொழுப்பு இல்லாததும் கூட. மொத்தத்தில், B Natural Select இளநீரானது, நுகர்வோரின் விருப்பங்களை மட்டுமே மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது.
Comments
Post a Comment