அப்போலோ மருத்துவமனையில் தோள்பட்டை நோய்க்கு ஒரே தள சிகிச்சை

 அளவை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறையாகும்.



அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி (Preeta Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group) இது குறித்துக் கூறுகையில், “நோயாளிகளுக்கு இறுக்கமான தோள்பட்டை அளிக்கும் வகையில் இந்த சிகிச்சையை வழங்குவதில் நாங்கள் பிரச்சினைக்கு நிவாரணம் மகிழ்ச்சியடைகிறோம். நோயாளிகள் மன மற்றும் உடல் வலிகள் இல்லாத நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த முயற்சி அதற்கான அடுத்தக்கட்டமாகும்.. தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு முறைகளை இணைத்து, சிகிச்சைக்கான விரிவான அணுகுமுறைகளை மேற்கொள்ளும் எங்கள் சுகாதார நடைமுறைகள் தொடரும்” என்றார்.








அப்போலோ மருத்துவமனையின் எலும்பியல், தோள்பட்டை மற்றும் முழங்கை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி சிவராமன் (B Sivaraman, Orthopaedic Shoulder and Elbow Surgeon, Apollo Hospitals) கூறுகையில், “இறுக்கமான தோள்பட்டை சிக்கலை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சை இல்லாத மற்றும் செலவு குறைந்த சிகிச்சை முறையாகும். இந்தச் சிகிச்சை நடைமுறையின் போது, அல்ட்ராசவுண்ட் எனப்படும் புறவொலி அல்லது மீயொலி வழிகாட்டுதலின் கீழ் தோளில் உள்ள காப்ஸ்யூலில் (இறுக்கமாகவும் உறைந்ததாகவும் இருக்கக் கூடிய தோள் காப்ஸ்யூல்) 100 முதல் 150 மில்லி சாதாரண கரைசலை (normal saline] நாங்கள் செலுத்துகிறோம். இந்த சிகிச்சை முறையை நாங்கள் அனஸ்தீஸியா கொடுக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்கிறோம் (மயக்க மருத்துவர் சுமதி சங்கர் வழங்குவது). இந்த சிகிச்சை 360 டிகிரியிலும் காப்ஸ்யூலை விரிவாக்க உதவுகிறது. இதன் மூலம் மேம்பட்ட தோள்பட்டை செயல்பாடு மற்றும் கைகளை முன்,பின்,மேல் பகுதிகளில் இயக்கத்தைப் பெற முடிகிறது. எங்களிடம் வரும் நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என்பதையும், எங்களின் சிகிச்சைகள் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க உதவியது என்பதையும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.


பலவிதமான தோள்பட்டை பிரச்சனைகளுக்கு இந்த சிகிச்சை மையம் விரைவான மற்றும் நல்ல பலன்களை அளிக்கும் தீர்வுகளை வழங்குகிறது. மருத்துவமனைக்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு சில முறை மட்டும் வருகை தந்தால் போதுமானது மற்றும் நோயாளிகளின் மன திருப்தி இவை இரண்டும் இந்த சிகிச்சையின் முக்கிய பலன்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அப்போலோ மருத்துவமனை தோள்பட்டை மற்றும் முழங்கை பிரச்சினைகள் குறித்த தொடர் மருத்துவக் கல்வித் திட்டத்தை [(CME) Continuous Medical Education programme] 25 பிப்ரவரி 2023 அன்று பொது மருத்துவர்களுக்கு வழங்குகிறது. டாக்டர் பி சிவராமன் மற்றும் மூத்த இயன்முறை மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) முரளி எம்பிடி ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று இந்த கல்வித் திட்டத்தை வழங்குகிறார்கள்.


நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது.


ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.


கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்குவதிலும், மருத்துவ கண்டுப்பிடிப்புகளை கண்டறிவதிலும் உலகத்தரம் வாய்ந்த க்ளினிக் சேவைகளை அளிப்பதிலும், நவீன பயன்படுத்துவதிலும் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து தன் தலைமைத்துவ இடத்தைத் தக்கவைத்து வருகிறது.


அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது. 

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest