'காலேஜ்ரோடு' திரைப்பட விமர்சனம்

 'காலேஜ்ரோடு' திரைப்பட ரேட்டிங்: 3.5/5


கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல..அது நம் உரிமை என்பதை கமர்சியல் கலந்து பேசியிருக்கிறது காலேஜ் ரோடு


சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு புடித்துள்ள லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது படத்தின் திரைக்கதை.










முதன்மை நாயகனாக லிங்கேஷ் இந்தப்படத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான மேலும் அழுத்தம் கொடுக்கிறது. நாயகியின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் கேரக்டரும் அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது. காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையோடே இணைத்துள்ளார் இயக்குநர். காமெடியில் ஒருவர் மட்டும் கவனம் ஈர்க்கிறார்


யூத்புஃல்லாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் தன் வேலை கச்சிதமாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஸ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது


எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர். சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஆச்சர்யம். ஒரு நல்ல கருத்தை தாங்கி வந்துள்ள காலேஜ்ரோடு நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்



இசை - ஆப்ரோ

ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.

எடிட்டர்- அசோக்


மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest