யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

 யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இவ்விழாவினில்…

 












11:11 Productions தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியதாவது…

இங்கு வந்து உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி. இப்போது திரைத்துறை மிக நன்றாக இருக்கிறது. பெரிய படங்கள் மட்டுமே ஓடும் என்ற நிலையில் லவ் டுடே போன்ற படங்கள் ஓடுவது பெரிய நம்பிக்கை தருகிறது. பேபல் என்றொரு படம் வந்துள்ளது அந்த படத்தில் வேறு வேறு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் ஒருவரையொருவர் எப்படி பாதிக்கும் என சொல்லியிருப்பார்கள். அதே போல் தான் நம் வாழ்க்கையும் என நினைக்கிறேன். இந்தப்படமும் அது போல் தான். மிக நல்ல திரைக்கதை. இப்படத்தை நான் வெளியிடுகிறேன். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக படம் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ராஜாதாஸ் குரியாஸ்
எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. எனக்கு தமிழ் பிடிக்கும். இப்போது திரைத்துறை மிகப்பெரிதாக மாறியிருக்கிறது. அந்த நம்பிக்கையில் இந்தப்படத்தை இரு மொழிகளில் எடுத்துள்ளோம். இதை எப்படி வெளியிடப்போகிறோம் என பயந்து கொண்டு இருந்தோம் அப்போது தான் பிரபு சாரை சந்தித்தோம் அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்தில் இப்படம் நடந்தது. இப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்து தந்த அனைவருக்கும் நன்றி. தமிழ் திரையில் இப்போது நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.


இசையமைப்பாளர் ரெஞ்சின் ராஜ் பேசியதாவது..,
திரையரங்கில் வெளியாகும் எனது முதல் படம் இது. எப்போதும் எனது ஃபேவரைட் தமிழ் பாடல்கள் தான். யூகி படத்தில் வித்தியாசமான இசையில் இரண்டு பாடல்களை தந்துள்ளோம். உங்கள் ஆதரவு எனக்கு தேவை. இயக்குநர் ஜாக் ஹாரீஷ்க்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ் பேசியதாவது…
எழுத்தாளர் பாக்கியராஜால் தான் இந்தப்படத்தில் வந்தேன். ஜாக் சாரிடம் வேலை பார்ப்பது மிக கடினமாக இருக்கும். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடந்தது நடிகர்களின் ஒத்துழைப்பால் தான் சிறப்பாக இப்படத்தை முடிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி.

நடிகை பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது….
முதல் முறையாக ஒரு ஆடியோ லாஞ்ச். யூகி படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அறிமுகமான சீக்கிரத்தில் இருமொழி படத்தில் நடிப்பது மிகப்பெரிய கொடுப்பினை. இந்தப்படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. பாக்கியராஜ் சார் மிக அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் சார் அற்புதமாக எடுத்துள்ளார். இரு  மொழியில் இப்படத்தை எடுத்தது புது அனுபவம். இப்படத்தை வெளியிடும் 11:11 Productions நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு ஆதரவு உங்களுக்கு நன்றி.

கதாசிரியர் பாக்கியராஜ் பேசியதாவது..
குஷன் பிரதர், ஜாக் பிரதர் மற்றும் 11:11 Productions  நிறுவனத்தின் பாபு திலக் ஆகியோருக்கு நன்றி. ஜாக் எந்த ஒரு சின்ன விசயத்திலும் என்னை ஆலோசனை கேட்பார் அவரது அன்புக்கு நன்றி. யசோதா படம் வாடகை தாய் கதை என்றவுடன் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் படம் பார்த்த பிறகு நிம்மதி வந்தது. ஏனெனில் அது முழுக்க வேற கதை. இப்படம் மனித உறவுகளை பற்றிய கதை. இதில் எமோஷன் நிறைய இருக்கும். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை இப்படம் ஏமாற்றாது. அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நட்டி எனும் நட்ராஜ் பேசியதாவது…
பிரபு திலக் என்னுடைய ஃபேமிலி மாதிரி அவர் வெளியிடும் படங்களை பார்த்து பெருமையாக இருக்கும். அவர் இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்தப்படம் கோவிட் காலத்தில் நடந்தது. எங்கள் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி. ஜாக் மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார். நீங்கள் நினைப்பது போல் இந்தப்படம் இருக்காது உங்களை நிறைய ஆச்சர்யபடுத்தும். நன்றி.

நடிகை ஆத்மிகா பேசியதாவது..
நீண்ட காலம் கழித்து தமிழில் வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் எடுத்தது மகிழ்ச்சி. மிக நல்ல திரைக்கதை இக்கதையில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான பாத்திரம் முதலில் செய்வது கடினமாக இருந்தது. சவாலாக முயன்று செய்துள்ளேன். இப்படத்தில் ஆதரவு தந்த அனைவருக்கும் உடன் நடித்த நடிகர்களுக்கும் நன்றி.

நடிகர் நரேன் பேசியதாவது…
கைதி படத்திற்கு பிறகு நிறைய போலீஸ் பாத்திரம் இந்தக்கதையும் அந்த மாதிரி தான் என்பதால் இப்படத்தில் நடிக்க கூடாது என்று தான் கதை கேட்டேன் ஆனால் கதையை இயக்குநர் சொன்ன விதம் அதில் இருந்த திருப்பங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது. இந்தப்படத்தை அற்புதமாக எடுத்துள்ளார்கள். ஓடிடியில் நிறைய ஆஃபர் வந்த போதும் இப்படத்தை நம்பி திரையரங்கிற்காக தயாரிப்பாளர்கள் கொண்டுவந்துள்ளார்கள். இப்படம் நிறைய பேரை தமிழ் சினிமாவிற்கு தரும். கதிர் நட்டி இருவருடன் நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியிடுவதில் உள்ள கஷ்டம் எனக்கு தெரியும்  படத்தை வெளியிடும் 11:11 Productions பிரபு திலக் அவர்களுக்கு நன்றி. படம் பாருங்கள் பிடிக்கும்.


நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது…
கயல் படம் வந்து 8 வருடன் ஆகிறது. நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. யூகி படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இப்படம் பண்ணும் போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன். மிக மிக சுவாரஸ்யமான கதை. மிக அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.


நடிகர் கதிர் பேசியதாவது…
சுழல் செய்து கொண்டிருக்கும் போது இந்தக்கதை வந்தது. போலீஸ் திரும்ப பண்ணக்கூடாது என இருந்தேன் ஆனால் கதை மிகவும் பிடித்திருந்தது. நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக்கூடிய கதை. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன். ஆனால் இந்தப்படம் மிக வித்தியாசமாக இருக்கும். பாக்கியாராஜ் அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் குழந்தை மாதிரி பேசி வேலை வாங்கி விடுவார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

திருமதி திலகவதி அவர்கள் பேசியதாவது…
மேடை இளம் திறமையாளர்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் திறமையாளர்கள் இணைந்து வேலை செய்துள்ளார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. திரைப்படம் பார்ப்பவரிடத்தில் பெரும் பாதிப்பை தரும் ஒன்று. நல்ல கருத்துக்கள் கூறும் படங்கள் வர வேண்டும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest