இந்தியன் மீடியா ஒர்க்ஸின் 5வது ஆண்டு துவக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியன் மீடியா ஒர்க்ஸின் 5வது ஆண்டு துவக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. சினிமா, தொலைக்காட்சி மற்றும் தொழில் துறையை சார்ந்த ஏராளமான பிரபலங்கள், பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டு இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத் தலைவர் ஜான் அமலனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜான் அமலன், 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாகக் கூறினார். கொரோனா காலத்தில் கப்பலில் பேஷன் ஷோ நடத்தியது பெரும் சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார்.
வரும் ஆண்டில் சென்னையில் விமானத்திலேயே பேஷன் ஷோ நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவிலேயே விமானத்தில் நடத்தப்பட உள்ள இந்த பேஷன் ஷோ, பேஷன் உலகில் மட்டுமின்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து துபாய்,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சர்வதேச அளவிலான அழகிப்போட்டி, விருதுகள் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறினார். வரும் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை புதிய உத்திகளோடு மக்களை கவரும் வகையில் நடத்த இருப்பதாகவும், சமூகத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாகவும் கூறினார்.
ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தியன் மீடிய ஒர்க்ஸ் நிறுவனத்துக்கு உறுதுணையாக் இருந்து வரும் தொழில் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
India Media Works' 5th Anniversary celebration was held in Chennai with great fanfare. A large number of celebrities, dignitaries from cinema, television and business industry participated in the function and showered their blessings & congratulations to the India Media Works founder John Amalan at the event.
Speaking to the media earlier, John Amalan said that it was a pleasure to step into the 5th year. He said that it was a big challenge to hold a fashion show on a ship during the Corona period.
He also said that he is planning to do a fashion show on the plane in Chennai by next year. Not only in the fashion world he also said that this fashion show, which is going to be held in the flight for the first time in India will make everyone look back.
He also said that he is planning to conduct international beauty pageants ,fashion shows & award shows in Dubai, Malaysia and Singapore. He said that in the coming years all the events will be conducted with new strategies to attract the people and thereby provide employment to the talented youngsters in the society.
He also thanked the industries, traders, press & media ,political leaders and sponsors for supporting India Media Works.
Comments
Post a Comment