நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய காலணிகள் தொகுப்பை விளம்பரப்படுத்த
நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய காலணிகள் தொகுப்பை விளம்பரப்படுத்த வாக்கரூ தேசிய விளம்பர தூதராக இந்தி நடிகர் வருண் தவான் நியமனம் சென்னை , ஆகஸ்ட் 10 , 2024 நாட்டின் முன்னணி காலணி பிராண்டுகளில் ஒன்றாக திகழும் வாக்கரூ , தனது பிராண்டின் தேசிய விளம்பர தூதராக இந்தி நடிகர் வருண் தவானை நியமனம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் " வாக். வாக். வாக். வாக் வித் வாக்கரூ" என்னும் விளம்பரத்தின் மூலம் இதன் புதுமைமிக்க காலணிகளை மக்களிடையே பிரபலப்படுத்த இருக்கிறார். இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக , புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாக்கரூ + மற்றும் சூப்பர் க்ளாக்ஸ் உட்பட இதன் புதுமையான காலணிகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் புதிய விளம்பரத்தை இந்நிறுவனம் வெளியிட உள்ளது. இளம் நடிகர் வருண் தவான் உடன் இணைந்திருப்பது என்பது எங்கள் தயாரிப்புகளின் விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்வதோடு , நாடு முழுவதும் உள்ள இளைய தலைமுறை மற்றும் பேஷன் மீது ஆர்வமுள்ள நுகர்வோரை ஈர்க்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வாக்க...