2500 students eagarly participateded in 5th National Abacas based Maths Olympiad 2024 Competition.

 2500 students eagarly participateded in  5th National Abacas based Maths Olympiad 2024 Competition.

In this competitive education word, mind maths play very important roll to gain contemporary knowledge to the students.

In this base INDIAN ABACAS is giving basic mathematical coaching for  students for 25 years.

Because of this coaching Thousands of students are getting strong base in mathematics and also   Academic success.

Abacas free coaching to government schools and sub urban students for more than 2 years is a significant story.

Abacas Make it as permanent successful episode through national wide MIND MATHS competitions for 25 years.

In this base abacas contest its 5th National Abacus competition in Chennai. For competition Abacas prepare students for the past one month with more than 500 efficient teachers and mentors. With this effort 2500 students participated 5th National Abacas based Maths Olympiad 2024 competition at Chennai nanthambakkam trade centre.

Tamil Nadu Minority Commission Chairman Thiru Peter alphose inaugurarted the Competiton And Appreciated the students who were a part of this competition. He said, This is as an all india level competition and We are proud that it is conducted in tamilnadu.  However youngster will gain knowledge and grow higher in life. Our tamilnadu cheifminister MK Stalin has been constantly supporting these ideas.

Indian Abacas Managing director Bhasheer Ahamed simply explained the motivation of organisation.  He said,not only in tamilnadu, we aim to all classes of students  as a efficient scholars in international level,  especially deprived and dowentrodden sections of society all around india.
 He also said In future we are expecting Tamil nadu government will support to tune-up our Indian  students in   inter nation standard.

Tamil nadu Minnister Ginji Masthan distributed prize and certificates to Winner and encourage them with optimistic manner. He said abacus will increase the knowledge of these children. Our Chief minister is taking special care about the state students education by introducing many schemes such as “naan mudhalvan”, “pudhumaipen” “Tamilputhalvan”. All these schemes have inspired other state cheif ministers too.  Parents should make use of all these schemes to create good scholars in future.

 


 










2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் தேசிய எண்கணித போட்டி அமைச்சர் செஞ்சி மஸ்தான், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு


சென்னை, ஜூலை 20- அகில இந்திய அளவில் சுமார் 2500-க்கும் அதிகமானோர் பங்கேற்ற 5-வது தேசிய எண்கணித போட்டியை மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தொடங்கி வைத்தார்.


அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் தேசிய அளவில் மனக்கணிதப் போட்டியை 25 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது.


இந்தாண்டு தேசிய எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது. இதனை தமிழக சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அப்போன்ஸ் தொடங்கி வைத்து பேசியதாவது:


இந்த போட்டியானது தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை. இந்த எண்கணித போட்டி குழந்தைகளின் அறிவு திறைமையை மேம்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் முதல்வர் கல்விக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார். அதனை குழந்தைகள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார், இந்த எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து சுமார் 2500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றார்கள். இந்த போட்டியினை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் இந்தியன் அபாகஸ் அமைப்பு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தது.


அதுமட்டுமல்லாது, சென்னை அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் அபாகஸ் நிறுவனம் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கணித பாடப்பிரிவில் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த போட்டியில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களும் பங்கேற்றார்கள்.


போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கமும், பரிசு பொருட்களும் மற்றும் வெற்றி கோப்பைகளையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கி பேசியதாவது:


இந்த போட்டியானது மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் கல்விக்கு முக்கியதும் கொடுத்து வருகிறார். கல்வியில்  பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதோடு அதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


மாணவிகளுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கப்பட்டது போல மாணவர்களுக்கும் கல்வித் உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனை பெற்றோர்கள் பயன்டுத்தி கொள்ளவேண்டும் என்றார். இதுபோன்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் அவர்கள் உயர்ந்த பதவிகளில் சாதனை படைக்க இந்த போட்டி மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


இந்த போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில், எங்களது முதல் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும், அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள் எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம் என்றார்.

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest