கிங் மேக்கர்ஸின் நிறுவனத்தின் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது

 கிங் மேக்கர்ஸின் நிறுவனத்தின் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது

18.ம் ஆண்டு தொடக்கவிழா ஜீ. ஆர். டி அக்ரோ ஃபார்மர்ஸ் லோகோ வெளியீட்டு விழா சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா என்று முப்பெரும் விழாவாக சென்னை வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது

 இவ்விழாவில்  அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்  தேசிய தலைவர்   faira ஹென்றி
 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்    அவர்களின் அரசியல் ஆலோசகர்  விஞ்ஞானி பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


 

செய்தியாளர்களிடம் பேசிய கிங்மேக்கர்ஸ் நிறுவனர் ராஜசேகர்* கிங் மேக்கர்ஸ் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் தங்கள் வாடிக்கையாளர்கள் 95 ஆயிரம் பேர் தங்கள் நிறுவனத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்

அதனைத் தொடர்ந்து கிங்மேக்கர்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு உதவிடும் விதமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம் மொத்தமாக 250 ஏக்கர் பசுமை குடில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதேபோல் 250 விவசாயிகளிடம் தலா ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமை குடில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 தங்களிடம் ஒரு ஏக்கர் நிலத்தை விவசாயிகள் லீசுக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என கூறினார்

 தங்களிடம் விவசாயிகள் நேரில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தங்களது நவீன விவசாய புரட்சி குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்

 பசுமை குடில் விவசாய முறை இஸ்ரேல்,உக்கிரன் உள்ளிட்ட நாடுகளில் பெருமளவு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனை இந்தியாவிலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என கூறினார்

 இதற்காக கிங் மேக்கர்ஸ் நிறுவனம் GRT (Green Revolution Tech Agro form) என்கிற அமைப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest