அகில உலக சைவர்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகள்
அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு
பதிவு எண்: 271/2023
எண்.56/1, தெற்குமாடவீதி, கோயம்பேடு, சென்னை -600 107.
கோசை நகரான் சிவக்குமார் 9094500055, 9840917204
துணைத்தலைவர் ஜா.சௌ.திருஞானம்
சுந்தரமூர்த்தி துணைச்செயலயளர் .கார்த்திகேயன் 9840100100
சிவத்திடு, ஏ.ரமேஷ்
7358582931
9841964891
9841465363
63 நாயன்மார்கள் அனைவரும் அவர்கள் இறைவனோடு கலந்த குருபூசை நாளை அந்தந்த ஊர்களில் பெரும் விழாவாக முன்னெடுத்து அரசு நடத்த கோரிக்கை வைக்கின்றோம்.
மாவட்டங்கள் தோறும் வழிபாட்டு மையங்கள், உருவாக்கி அந்த வழிபாட்டிற்கு பொதுமக்களை அடியார்களாக மாற்றி சிவவழிபாட்டை செய்ய ஆண், பெண் என்ற பேதமில்லை என்பதை பறைச் சாற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை அரசு வழங்க கோரிக்கை வைக்கின்றோம்.
அனைத்து கோவில்களிலும் தமிழிசை கருவிகளான திருச்சின்னம், உடல், தாளம், எக்காலம், கொம்புத்தாரை, கொக்கரை, சங்கு போன்ற வாத்தியங்கள் இசைக்க அரசு தனி அரசாணை வழங்க கோரிக்கை வைக்கின்றோம்.
268 பாடல் பெற்றத் தலங்களில் சிவனடியார்களும், பொது மக்களும் தரிசனம் செய்வதற்கும், சென்று வரத் தேவையான அடிப்படையான வசதிகளையும் போக்குவரத்து வசதிகளையும் தமிழக அரசு வழங்க கோரிக்கை வைக்கின்றோம்.
268 பாடல் பெற்றத் தலங்களின் ஊர் பெயர் பலகையை தேசிய (அ) மாநில நெடுஞ்சாலைகளில் இறைவன் இறைவி பெயர்களோடு வைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை வைக்கின்றோம்.
+ தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிக்க மாவட்டங்கள் தோறும் உள்ள இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு இசைக்கலையை அனைத்து ஊர்களிலும் கொண்டு சென்று அனைத்து ஆலயங்களிலும் அவர்களை பணியமர்த்த
கோரிக்கை வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பாழடைந்த (அ) பராமரிப்பு இல்லாத ஆலயங்களில் சிவனடியார்கள் மூலம் உழவாரப்பணியை செய்ய கொடுக்கப்படும் அனுமதியை இணையதளம் மூலமாக கொடுக்கின்ற முறையை அனைத்து ஆலயங்களிலும் செயல்படுத்த கோரிக்கை வைக்கின்றோம்.
தமிழகத்தின் சிவாலயங்களில் பிற்காலங்களில் தவிர்க்கப்பட்ட விழாக்களை ஆய்வு
செய்து அந்த விழாக்களை மீண்டும் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
கோரிக்கை வைக்கின்றோம்.
Comments
Post a Comment