Chennai hosts 'IndiaInternationalTravelMart' India'sPremierTravelandTourismExhibition

 


 

 

 

Chennai hosts

'IndiaInternationalTravelMart'

India'sPremierTravelandTourismExhibition


Venue: Hall – 1, Chennai Trade Centre, CTC Complex, Nandambakkam, Chennai - 600089.


 

 

Travel the Country, See the World!

 

Date:04–06August2023

India's leading travel-media company, Sphere Travelmedia& Exhibitionsisorganisingthe 'India International Travel Mart' (IITM) in Chennai from the 04-06 August 2023. The first event of the calendar year was organized in Bengaluru from the 28 – 30 July 2023 at the Tripura Vasini Hall, Palace Grounds. The event got tremendous response, with around 2500 trade visitors from the travel trade attending the mart.

 

It is a proud moment for Sphere Travelmedia& Exhibitions as it completes twenty-three years of providing the travel–trade industry and discerning buyers an opportunity to do business.

 

With over 200 exhibitors from various travel-trade organizations and tourism boards from 20 Indian states and 10 international destinations, IITM will showcase a variety of spheres such as pilgrimages, adventures, culture and heritage, beaches, Wildlife, hill-stations and many more.  The event offered a range of holiday options right from pursuing the One Horned Indian Rhinoceros to the desert festivals of Rajasthan to the UNESCO World Heritage Sites of Karnataka to the spiritual circuits of Tamil Nadu. The range of diverse and exciting destinations on display added tremendous value to the holiday-seeking plans.

 

The event is of immense importance to the tourism industry and which promoted tourist destinations of Karnataka by showcasing aspects of the tourism industry such as archaeology, culture and heritage of Karnataka. The event provided a be big boost to the promotion of the up-coming MysuruDasara Festival.

 

India’s Most Productive Travel-Marketplace –For those in the travel and hospitality industry, the ‘India International Travel Mart’ offers unparalleled networking opportunity to add more to their holiday portfolio. It is a unique opportunity for the travel trade to meet, network, negotiate and conduct business. The event is aimed at bringing the industry, face-to-face with the travel trade, corporate buyers as well as the end-customer with requisite purchasing power.

 

Unveils the world of Responsible Tourism: As the world embraces sustainable practices, IITM takes strides to promote responsible tourism and wellness. The exhibition highlights eco-friendly initiatives, community-based tourism projects, and conservation efforts to protect India's natural and cultural heritage. It encourages travelers to tread lightly and leave a positive footprint on the destinations they visit.

 

Participants from 20 Indian States: Karnataka, Rajasthan, Maharashtra, Kerala, Bihar, Uttar Pradesh, Punjab, Tamil Nadu, Chhattisgarh, Himachal Pradesh, Assam, Madhya Pradesh, Goa, Jammu & Kashmir, Puducherry, Andaman, Odisha, Uttarakhand, Delhi, Telangana, Jharkhand, West Bengal, etc.

 

International Participants representing over 10 Countries: Malaysia, Vietnam, Thailand, UK, Nepal, Dubai, Turkey, Singapore, Bhutan, Indonesia, Maldives, etc.

 

Sphere TravelMedia Director RohitHangalsaid“With the present ongoing recovery of tourism and with International Arrivals in India on a slower growth, ‘India International Travel Mart’ is the right event to provide an impetus to the Indian domestic tourism industry. The tourism stakeholders from the states of Karnataka, Rajasthan, Tamil Nadu, Maharashtra, Goa, Himachal Pradesh, Himachal Pradesh, Kerala, Uttarakhand, Uttar Pradesh many more destinations will be seen aggressively marketing their products. The event will be the perfect platform for those looking for packages across different genres, from religious travel, adventure, family holidays and honeymoons or even those, who are looking for conference destinations for their companies”.

 

Sphere TravelMedia Director Sanjay Hakhuadded: “As we recover from the pandemic to get back into business mode, India has emerged as one of the most interesting and productive countries for the travel industry both for leisure and business travel. The visitor profile is on a B2B & B2C format and will have over ten-thousand visitors over three days. Post the pandemic and with international destinations opening up to receive Indian guests, the event will see travel companies offering attractive packages to holiday hotspots around the world!”

 

Highlights

·        Biggest variety of Holiday Packages of over 1000 destinations in India and abroad.

·        This year, find more than 20 Indian tourism destinations participating making it one of the highlights of your search for that perfect holiday! country.

·        ‘Tourism Malaysia’ is the Partner Country at IITM Bangalore, while ‘Air India is the ‘Partner Airline’ this year.’

·        Tamil Nadu is the Host State for the event.

·        Karnataka Tourism and Rajasthan Tourism are the Partner States.

·        Himachal Pradesh Tourism, Jammu & Kashmir Tourism, Punjab Tourism & Gujarat Tourism are the Focus States

·        View ‘Incredible India’ with all its amazing hues and peerless vibrancy.

·        A once-a-year opportunity for travel agents and tour operators to reach out to partners from more than 10 International destinations and over 20 Indian states.

·        Add more to your travel portfolio.

·        International Participants representing over 10 Countries: Malaysia, Vietnam, Thailand, UK, Nepal, Dubai, Turkey, Singapore, Bhutan, Indonesia, Maldives, etc.

·        Adventure – International Destinations – Visas – Pilgrimage – Cultural pursuits – Wildlife – Conference – Wedding Destinations – pure joy!

·        Perfectly timed to target Dasara and upcoming Winter Holidays

·        The Visitor Profile is on a B2B & B2C format.

·        Entry is free.

 


 







 

 இந்தியாவின் பிரதான பயண மற்றும் சுற்றுலா கண்காட்சியான 

‘இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட்’

சென்னையில் நடைபெறுகிறது

தேதி: 04 – 06 ஆகஸ்ட் 2023

இடம்: அரங்கு – 1, சென்னை வர்த்தக மையம், சிடிசி வளாகம், நந்தம்பாக்கம், சென்னை - 600089.

நேரம்: 1100 மணிநேரம் முதல் 1800 மணிநேரம் வரை



நாடெங்கும் பயணியுங்கள், உலகைக் கண்டு இரசியுங்கள்!


இந்தியாவின் முன்னணி டிராவல் (பயண) ஊடக நிறுவனமான ஸ்ஃபியர் டிராவல்மீடியா & எக்ஸிபிஷன்ஸ், சென்னை மாநகரில் 2023 ஆகஸ்ட் 04 – 06 நாட்களில் ‘இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட்’ (IITM) கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்துகிறது. இந்த காலாண்டர் ஆண்டில் இதன் முதல் நிகழ்வு, பெங்களூரு மாநகரில் 2023 ஜுலை 28 – 30 தேதிகளில் பேலஸ் கிரவுண்ட்ஸ்-ல் உள்ள திரிபுர வாசினி ஹாலில் நடத்தப்பட்டிருந்தது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இக்கண்காட்சியில் பயண தொழில்துறையைச் சேர்ந்த 2500 வர்த்தக வருகையாளர்கள் பங்கேற்றிருந்தனர். 


பயண – வர்த்தக துறைக்கும் மற்றும் வாங்குனர்களுக்கும் எளிதான முறையில் பிசினஸ் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்கிவரும் ஸ்பியர் டிராவல்மீடியா & எக்ஸிபிஷன்ஸ் இருபத்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் இந்நிறுவனத்திற்கு இதுவொரு பெருமைமிகு தருணமாகும். 


10 வெளிநாட்டு அமைவிடங்கள் மற்றும் 20 இந்திய மாநிலங்களின் சுற்றுலா வாரியங்கள் மற்றும் பயண – வர்த்தக துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து 200-க்கும் அதிகமான காட்சிப்படுத்தும் நிறுவனங்கள் பங்கேற்கின்ற IITM, ஆன்மீக சுற்றுலாக்கள், சாகசப்பயணங்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், கடற்கரைகள், வன வாழ்க்கை அமைவிடங்கள், மலை பிரதேச சுற்றுலா தளங்கள் என பல்வேறு அமைவிடங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்துகிறது. ஒரு கொம்புள்ள இந்திய காண்டாமிருகம் வசிக்கும் வாழ்விடங்கள், ராஜஸ்தானின் பாலைவன கொண்டாட்ட நிகழ்வுகள், கர்நாடகாவில் அமைந்துள்ள யுனஸ்கோ உலக புராதன பாரம்பரிய அமைவிடங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்மீக சுற்றுலா தளங்கள் ஆகியவை உட்பட பல்வேறு வகைப்பட்ட விடுமுறை மற்றும் சுற்றுலா விருப்பத்தேர்வுகளின் தொகுப்பை இக்கண்காட்சி நிகழ்வு வழங்குகிறது. விடுமுறையை மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கு இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மாறுபட்ட, உற்சாகமளிக்கும் அமைவிடங்களின் விரிவான அணிவரிசை இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. 


சுற்றுலா தொழில்துறைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழும் இந்நிகழ்வு, கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு சுற்றுலா அமைவிடங்களை நேர்த்தியாக முன்னிலைப்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தின் தொல்லியல், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் போன்ற சுற்றுலா தொழில்துறையின் வேறுபட்ட அம்சங்களை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை ஈர்ப்பதாக இது அமைந்திருந்தது. விரைவில் நிகழவிருக்கும் உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை மேலும் பிரபலமாக்குவதற்கு சிறப்பான ஊக்கத்தை இக்கண்காட்சி நிகழ்வு வழங்கியிருக்கிறது. 


மிக அதிகமாக பயனளிக்கும் இந்தியாவின் பயண – சந்தை அமைவிடம் – பயணம் மற்றும் விருந்தோம்பல் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் வழங்கும் விடுமுறை பயணத் திட்டங்களில் இன்னும் அதிக அமைவிடங்களை சேர்ப்பதற்கு நிகரற்ற தொடர்பு வாய்ப்புகளை இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட் வழங்குகிறது. பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் இயங்கும் நபர்கள் சந்திக்கவும், பிணைப்பை உருவாக்கவும் பேர பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவும், பிசினஸ் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தனிச்சிறப்பான வாய்ப்பாக இந்நிகழ்வு திகழ்கிறது. தொழில்துறையைச் சேர்ந்தவர்களை பயண ஏற்பாடு மற்றும் சுற்றுலா துறையினர், கார்ப்பரேட் கொள்முதலாளர்கள் மற்றும் தேவைப்படுகின்ற வாங்கும் திறனுள்ள இறுதிநிலை வாடிக்கையாளர்கள் ஆகியோரை ஒரு அமைவிடத்தில் ஒருங்கிணைத்து, நேருக்கு நேராக சந்தித்து, கலந்துரையாடும் வாய்ப்பை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.  


பொறுப்புள்ள சுற்றுலா உலகம் ஒரு அறிமுகம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, நீடிப்புத்தன்மையுள்ள நடைமுறைகளை உலகம் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், பொறுப்புள்ள சுற்றுலா மற்றும் நலவாழ்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்க IITM சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் இயற்கை வளங்களையும், கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாக்க உதவும் சுற்றுச்சூழல் தோழமையுள்ள முன்னெடுப்புகள், சமூகத்தை அடித்தளமாக கொண்ட சுற்றுலா செயல்திட்டங்கள், இயற்கையை பாதுகாக்கும் முயற்சிகள் ஆகியவற்றை இக்கண்காட்சி முன்னிலைப்படுத்துகிறது. தாங்கள் பயணிக்கின்ற இடங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, நேர்மறை பாதத்தடங்களை விட்டுச்செல்ல சுற்றுலா பயணிகளை இது ஊக்குவிக்கிறது.  


20 இந்திய மாநிலங்களின் பங்கேற்பு: கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், கோவா, ஜம்மு & காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான், ஒடிசா, உத்தரகாண்ட், டெல்லி, தெலங்கானா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சுற்றுலா வாரியங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றன. 



10-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்பு: மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், துபாய், துருக்கி, சிங்கப்பூர், பூட்டான், இந்தோனேசியா, மாலத்தீவு ஆகிய 10-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்பு. 


ஸ்பியர் டிராவல்மீடியா இயக்குனர் திரு, ரோஹித் ஹங்கால் பேசுகையில், “சுற்றுலாத் துறை தற்போது மீண்டு வருகின்ற நிலையில் மற்றும் இந்தியாவிற்கு சர்வதேச பயணிகள் வருகை தருவது மெதுவான வளர்ச்சியைப் பெற்று வருகின்ற தருணத்தில் இந்திய உள்நாட்டு சுற்றுலாத் தொழில்துறைக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் வழங்குவதற்கு ஏற்ற சரியான நிகழ்வாக இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட் திகழ்கிறது. கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றலா வாரியங்களும் மற்றும் இத்துறையில் இயங்கும் நிறுவனங்களும், அவைகளது திட்டங்களை தீவிர முனைப்போடு சந்தைப்படுத்த இதுவொரு உகந்த அமைவிடமாகும். சமயம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பயணம், சாகசப் பயணங்கள், குடும்ப விடுமுறைகள், தேனிலவு நிகழ்வுகள் என பல்வேறு வகையினங்களில் சிறப்பான பயண / சுற்றுலா தொகுப்புகளை பெற விரும்பும் நபர்களுக்கு இக்கண்காட்சி நிகழ்வு மிகப்பொருத்தமான தளமாக இருக்கும். தங்களது நிறுவனங்களின் வருடாந்திர மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை நடத்துவதற்கு சிறப்பான இடங்களை தேர்வுசெய்ய விரும்புபவர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய நிகழ்வாக இக்கண்காட்சி இருக்கும்.” என்று கூறினார். 


ஸ்பியர் டிராவல்மீடியா - ன் இயக்குனர் திரு. சஞ்சய் ஹக்கு கூறியதாவது: “பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு பிசினஸ் வளர்ச்சியை நோக்கி நகரும் இத்தருணத்தில், பொழுதுபோக்கு மற்றும் பிசினஸ் பயணம் என்ற இரண்டுக்கும் ஆர்வமூட்டும் சிறப்பான நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இக்கண்காட்சி நிகழ்வுக்கு வருகை தருபவர்கள் B2B & B2C என்ற இரு வகையினத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்கட்சி நிகழ்வில், 10,000-க்கும் அதிகமான வருகையாளர்களின் பங்கேற்பு எதிர்பார்க்கப்டுகிறது. கொரோனா பெருந்தெற்றுக்குப் பிறகு, இந்திய விருந்தினர்களை வரவேற்க சர்வதேச சுற்றுலா அமைவிடங்கள் முழுவீச்சுடன் தயாராகிவரும் நிலையில் உலகெங்கிலும் உள்ள பிரபலமான விடுமுறை & சுற்றுலா அமைவிடங்களுக்கு கவர்ச்சிகரமான பயணத்திட்ட தொகுப்பை பயண ஏற்பாடு நிறுவனங்கள் இந்நிகழ்வில் வழங்கவிருக்கின்றனர்.”


முக்கிய அம்சங்கள்

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 1000-க்கும் அதிகமான அமைவிடங்களுக்கு விடுமுறை பயண திட்டங்களின் விரிவான அணிவரிசை. 

இந்த ஆண்டு 20-க்கும் அதிகமான இந்திய மாநிலங்களின் சுற்றுலா வாரியங்கள் பங்கேற்பதால், சிறப்பான விடுமுறை அமைவிடத்திற்கான உங்கள் தேடலுக்கு இது தீர்வு வழங்கும். 

IITM பெங்களூரு நிகழ்வில், பார்ட்னர் நாடாக ‘டூரிசம் மலேசியா’ பங்கேற்றது; இந்த ஆண்டுக்கான பார்ட்னர் ஏர்லைனாக “ஏர் இந்தியா நிறுவனம்; இணைந்திருக்கிறது.  

சென்னையில் நடைபெறும் இக்கண்காட்சி நிகழ்வை நடத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.  

கர்நாடகா டூரிசம் மற்றும் ராஜஸ்தான் டூரிசம் இந்நிகழ்வுக்கான பார்ட்னர் மாநிலங்களாக இடம்பெற்றுள்ளன. 

ஹிமாச்சல பிரதேச டூரிசம், ஜம்மு & காஷ்மீர் டூரிசம், பஞ்சாப் & குஜராத் டூரிசம் ஆகியவை இந்நிகழ்வில் சிறப்பு கூர்நோக்கம் பெறும் மாநிலங்களாக பங்கேற்கின்றன. 

“வியக்கவைக்கும் இந்தியா” – ஐ கண்டு ரசியுங்கள்.  

10-க்கும் அதிகமான சர்வதேச அமைவிடங்கள் மற்றும் 20-க்கும் கூடுதலான இந்தியா மாநிலங்களைச் சேர்ந்த பார்ட்னர்களுடன் கலந்துரையாடவும், பிணைப்பை ஏற்படுத்தவும் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த வாய்ப்பு இது. 

உங்களது பயண திட்டத்தின் தொகுப்பில் அதிக அமைவிடங்களையும், வசதிகளையும் இதன்மூலம் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

10-க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகளாக சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்பு: மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், துபாய், துருக்கி, சிங்கப்பூர், பூட்டான், இந்தோனேசியா, மாலத்தீவு. 

சாகசம் – சர்வதேச அமைவிடங்கள் – விசாக்கள் – ஆன்மீகம் / புனித பயணங்கள் – கலாச்சார கண்டறிதல்கள் – வனங்கள் – கருத்தரங்குகள் – திருமண அமைவிடங்கள் – ஆனந்தமான சுற்றுலாக்கள்! 

தசரா திருவிழாவையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் குளிர்கால விடுமுறை நாட்களையும் இலக்காக கொண்டிருப்பதற்கு சரியான நேரத்தில் நடைபெறும் கண்காட்சி. 

வருகை தரும் நபர்கள், B2B & B2C என்ற இரு வகையினங்களையும் சேர்ந்தவர்கள். 

கண்காட்சிக்கான நுழைவு இலவசம். 

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest