வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது: தலைமை வழிகாட்டியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்படுகிறார்

 வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது: தலைமை வழிகாட்டியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்படுகிறார் 

சென்னை, 15 பிப்ரவரி 2023: வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸின் துணை நிறுவனமான வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவோருக்காக, அகாடமி ஃபார் சிவில் சர்வீஸ் ஆஸ்பிரண்ட்ஸ் (ஏசிஎஸ்ஏ – ACSA) என்ற முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை (residential programme) சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், வெராண்டா ஐஏஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பரத் சீமான், “அறிவொளிச் சுடர்” (Torch of Enlightenment) என்ற பெயரிலான ஜோதியை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு.சகாயத்திடம் ஒப்படைத்தார்.







ஒரு ஆண்டு காலத்திற்கான இந்தப் பயிற்சித் இந்த திட்டத்தில், வெராண்டா உதவித்தொகை தேர்வில் (வெஸ்ட் – VEST) தேர்ச்சி பெறுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அகாடமி மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டல் ஆதரவை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழங்குவார். இந்தியா முழுவதிலும் உயர்மட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, வேலைவாய்ப்புப் பயிற்சியை எளிதாக்குவார்கள்.


விழாவில் பரத் சீமான் பேசுகையில், “இந்த திட்டல் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் திறமையும் அந்தஸ்தும் எங்களுடன் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்களது அடையாளத்தின் மதிப்புகளுடன் இணைந்த ஒரு முன்மாதிரி நபராகத் திகழ்கிறார். அவர் மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் பயிற்சிப் பயணத்தின் போது அவர்களுக்குத் தேவையான தெளிவை அளித்து, வெற்றியை நோக்கி அவர்களை வழிநடத்துவார்.” என்றார்.






முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தலைமை ஆலோசகருமான சகாயம் [Mr Sagayam, former IAS officer and Chief Mentor] கூறுகையில், “தேசத்தின் நிர்வாகப் பணிகளில் சேரவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்கேற்கவும் விரும்பும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இந்த உறைவிப் பயிற்சித் திட்டத்தின் தொடக்கத்தின் மூலமாக, மாணவர்களின் பயிற்சிப் பயணத்தில் ஒரு முழுமையான அணுகுமுறையை வெராண்டா லேர்னிங் உருவாக்கி உள்ளதுடன் அவர்களது தேர்வுத் தயாரிப்புக்கு அருமையான அடித்தளத்தை அமைத்துள்ளது.” என்றார்.




அறிவொளிச் சுடர் ஜோதி கீழ்க்கண்ட தேதிகளில் தமிழ்நாட்டின் 6 இடங்களுக்கு பயணிக்கும்.




தேதி இடம்


25 பிப்ரவரி 2023 வேலூர்


26 பிப்ரவரி 2023 திருநெல்வேலி


4 மார்ச் 2023 சேலம்


5 மார்ச் 2023 கோயம்புத்தூர்


11 மார்ச் 2023 திருச்சி


12 மார்ச் 2023 மதுரை


இந்த இடங்களில் வெஸ்ட் (VEST) தேர்வும் நடத்தப்படும்.




ஏசிஎஸ்ஏ (ACSA) 150 மாணவர்களை தமது சென்னை “பிருந்தாவன் வளாகத்தில்” இணைத்துக் கொள்ளும். அத்துடன் 5 மாணவர்களுக்கு 100 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும். இவர்களின் பெயர்கள் 19 மார்ச் 2023 அன்று சென்னையில் நடைபெறும் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest