ஒரு அடார் லவ் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

 

காதலர் தினத்தையொட்டி உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும்  நூரின் ஷெரீப் நடிப்பில் வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

-----

புத்துணர்ச்சியூட்டும் நகைச்சுவை கலந்த காதல் திரைக்கதையை காண  பிப்ரவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

 

சென்னை 8 பிப்ரவரி, 2023: சமூக ஊடக தளங்களில் கண் சிமிட்டலுக்கு வைரலான பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் வெளிவந்த “ஒரு அடார் லவ்” திரைப்படத்தை உலக தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்ப உள்ளது வயகாம்18 நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ். பிப்ரவரி 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு  காதல் கலந்த இந்த காமெடி திரைப்படத்தை காண உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய தவறாதீர்கள். 

 

 








 

 

சாரங் ஜெயப்பிரகாஷ் மற்றும் லிஜோ பனாடன் எழுதிய இத்திரைப்படத்தை ஹேப்பி வெட்டிங், நள சமயம் மற்றும் தமக்கா புகழ் ஒமர் லுலு இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீப் மற்றும் ரோஷன் அப்துல் ரஹூப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரபல நடிகர்களான அனீஷ் ஜி மேனன், ரோஷ்னா ஆன் ராய், சிவாஜி குருவாயூர், பிரதீப் கோட்டயம் மற்றும் அஞ்சலி நாயர் இத்திரைப்படத்தில் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நூரின் ஷெரீப்புடன் இணைந்து கதாநாயகன் ரோஷன் நடித்துள்ளார். பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் நூரின் ஷெரீப் இருவரும் கதாநாயகனாக ரோஷன் மீது காதல் புரிவது இக்கதைக்கு மேலும் சுவாரஸ்யமூட்டும்.

 

இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் காதல் மற்றும் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நேரத்தில் ஒரு பொதுவான வாட்ஸ்அப் குழுவில் வெளியான வீடியோ அவர்கள் வாழ்க்கையை புரட்டி போடுகிறது.இந்த ஈர்க்கக்கூடிய காதல் கதையில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பது இத்திரைப்படத்தின் இறுதி திருப்பமாகும். ரோஷன் தனது காதலா அல்லது தோழியா என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு வரும் நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்னும் கேள்வி பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமூட்டும் நிகழ்வாக அமையும். இத்திரைப்படத்தில் சுவாரஸ்யமான கதைகளம்  மற்றும் முன்னணி ஜோடிக்கு இடையே சில அழகான காதல் தருணங்கள் மட்டுமில்லாமல் மேலும் சில பெப்பி இசை இத்திரைப்படத்தை  இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது.

 

திரைப்படம் குறித்து இயக்குநர் ஒமர் லுலு கூறுகையில், “இளம் வயது  காதல் உறவுகள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளைப் பற்றி பேசும் இந்த அழகான காதல் கதையை சித்தரிக்கவும் வெளிப்படுத்தவும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சஸ்பென்ஸ் கூறுகளுடன் அன்பான காதல் கதையை உணர்வுபூர்வமாக கையாள நாங்கள் சிறந்த ஒரு முயற்சியை மேற்கொண்டோம். படத்தில் வரும் காதல் காட்சிகளும், முன்னணி நடிகர்களின் இயல்பான நடிப்புடன் இணைந்த சோகமான கிளைமாக்ஸும் அனைத்து பார்வையாளர்களாலும்   விரும்பப்படும் என்று நான் நம்புகிறேன்.

 

ரசிக்க வைக்கும் காதல் கலந்த நகைச்சுவையான இத்திரைப்படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2023 அன்று மதியம் 2:00 மணிக்கு  உங்கள் குடும்பத்தினருடன் பழைய நினைவுகளையும் உயர்நிலைப் பள்ளி காதல் மற்றும் அதன் தருணங்களையும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வர  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை அனைத்து கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் DTH தளங்கள் - சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553) போன்ற அனைத்திலும் காணலாம்.

Comments

Popular posts from this blog

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report

Medimix Family Launches Soapera - A Coffee Table Book Capturing The Rich Legacy of world’s largest selling Ayurvedic Soap, Medimix

CK’s Bakery Launches brand-new Rose Milk Pistachio Cake this Mother’s Day; Rolls out Exciting Social Media Contest