எஸ்ஆர்எம் ல் இந்திய பொருளாதாரம் மற்றும் 2023 பட்ஜெட் பற்றிய டாக்டர் பாரிவேந்தர் அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவு
எஸ்ஆர்எம் ல் இந்திய பொருளாதாரம் மற்றும் 2023 பட்ஜெட் பற்றிய டாக்டர் பாரிவேந்தர் அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவு
குழும நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அறக்கட்டளை சார்பில் இந்திய பொருளாதாரம் மற்றும் 2023 ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை பற்றிய சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் வி. நாகப்பன் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் டி.பி. கணேசன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து வரவேற்றார்.
எஸ்ஆர்எம் குழும நிறுவனர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் அறக்கட்டளை சார்பில் 8வது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில், இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் வி. நாகப்பன் பங்கேற்று இந்திய பொருளாதாரம் மற்றும் 2023 ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை பற்றி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகையில் :
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 26.11.1947ல் நாட்டின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 24.59 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்தது, அது முதல் கடந்த ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருவாயை கொண்டு அதன் மூலம் என்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்ற அறிக்கை வெளியிடப்படும்.
நாட்டின் வருவாயில் முக்கிய வருவாய் வரி விதிப்பின் மூலமே.
பற்றாக்குறை பட்ஜெட் என்பது இயல்பான பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, பயனுள்ள வருவாய் பற்றாக்குறை, வருவாயின் ஆரம்பநிலை பற்றாக்குறை ஆகும். நாட்டின் வருவாய் இழப்புகளை எடுத்துக்கொண்டால் வாங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் முறையாக திருப்பி செலுத்தப்படாமல் வாரா கடனாக இருப்பது, நிதி பற்றாக்குரைக்காக வாங்கப்படும் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியின் மூலம் இழப்பு உள்ளிட்டவை ஆகும், வருவாய் இழப்பு என்பது அபாயகரமான நிலைக்கு வழி வகுக்கும்.
நமக்கு தேவையான நிதி அளவு 45 லட்சம் கோடி ஆகும், இதில் வரி வருவாய் மூலம் கிடைப்பது 33லட்சம் கோடி மட்டுமே,இதனால் தான் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.
2023-24 மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண்மை, ஊராக வளர்ச்சி, கல்வி துறை, சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு, புது தொழில், செயற்கை நுண்ணறிவு செயல் பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண்மை தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு அதிக வேளாண் உற்பத்திக்கு வழிவகுக்கும்,ஊராக நிதி ஒதுக்கீடானது கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவும், தொழில் துறைக்கு ஒதுக்கியுள்ள நிதி புத் தொழில் வளர்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொழில் துறையில் புதுமையை வடிவமைக்க உதவும், மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அடிப்படை கட்டமைப்புகளை நவீனமயமாக்க பயன்படும்.
தற்போது பணபர்வதினை ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) மூலம் 70% உள்ளது. அதாவது அதன் அளவு 125 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் பண பரிமாற்றம் எளிமை ஆக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இறக்குமதி செலவினம் டாலர் மூலம் நடைபெறுவதால் நாட்டின் அந்நிய செலாவணி கையிறுப்பு குறைகிறது, இதனை தவிர்க்க கச்சா என்னை உள்ளிட்டவைகளுக்கு டாலருக்கு பதில் இந்திய பணத்தின் மூலம் வழங்கிட விடப்பட்ட கோரிக்கையை ரஸியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் பணவீக்கம் காரணமாக பொருளாதார நிலையில் வீழ்ச்சி ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலிமையாக உள்ளது என்று கூறினார்
இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் குழும வேந்தரின் ஆலோசகர் ராகவன் மற்றும் அறிவியல் மற்றும் கலையியல் புலம் பள்ளி டீன் பேராசிரியர் துரைசாமி, பல்வேறு துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment