’பேய காணோம்’ திரைப்பட விமர்சனம்

 ’பேய காணோம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5


Casting : Selva Anbarasu, Gowsik, Sandhya Ramachandran, Godhandam, Jaya TV Jacob, VK Sundar


Directed By : Selva Anbarasu


Music By : Mr.Kolaru and Kathar Masthan


Produced By : Theni Bharath and R.Surulivel


 












இயக்குநர் செல்வ அன்பரசன், நாயகன் கெளசிக், நாயகி சந்தியா ராமச்சந்திரன், இணை இயக்குநர் கோதண்டம் உள்ளிட்ட படக்குழுவினர் பேய் படம் எடுப்பதற்காக காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது மீரா மிதுன் வருகிறார். அவர் படக்குழுவினருக்கு பல உதவிகள் செய்கிறார். இதற்கிடையே, அங்கு நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களால் நாயகி பயந்து போக, படக்குழுவினர் சாமியாரை அழைத்து வருகிறார்கள். 


 


அந்த இடத்திற்கு வரும் சாமியார், படக்குழுவினருடன் இருக்கும் மீரா மிதுன் பெண் அல்ல பேய் என்ற உண்மையை சொல்வதோடு, அங்கிருந்து சென்றுவிடும்படி சொல்லிவிட்டு, அவரும் ஓடி விடுகிறார். பேய் படம் எடுக்க வந்து பேயிடம் சிக்கிக்கொண்ட படக்குழுவினர் படம் எடுத்தார்களா? அல்லது பேயிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதை கலகலப்பாக சொல்வது தான் ‘பேய காணோம்’ படத்தின் கதை.



 


படத்தை இயக்கியிருக்கும் செல்வ அன்பரசன், படத்தில் த.க.தெ.ம.கி என்ற இயக்குநர் வேடத்தில் காமெடி கலந்த நடிப்பினால் கவர்கிறார். சினிமாவில் இருக்கும் சிலர் சினிமாவை எப்படி பார்க்கிறார்கள், என்பதை மிக நேர்த்தியாக சொல்பவர், திரைத்துறையினரையும் சில இடங்களில் கலாய்த்திருக்கிறார்.


 


நாயகனாக நடித்திருக்கும் கெளசிக் எப்போதும் போல் நடனம், சண்டைக்காட்சிகள் என இரண்டிலும் முத்திரை பதித்திருக்கிறார். அவருக்காகவே சண்டைக்காட்சி வைத்தது போல் இருந்தாலும் அது படத்திற்கும் பலம் சேர்க்கிறது.


 


நாயகியாக நடித்திருக்கும் சந்தியா ராமச்சந்திரன் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.



காமெடி ஏரியாவை தன் வசம் வைத்துக்கொண்ட கோதண்டம், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. இணை இயக்குநராக அவர் செய்யும் அட்டகாசங்கள் இயக்குநருக்கு தொல்லையாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.


 


ஜெயா டிவி ஜேக்கப், பத்திரிகையாளர் வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய்சங்கர், துரை ஆனந்த், ரவி, விக்கி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் தங்களை வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.



 


ராஜ்.ஓ.எஸ், கௌபாஸு, பிரகாஷ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மூன்றுபேரும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார்கள்.



 


மிஸ்டர் கோளாறு இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகமாக இருக்கிறது. காதர் மஸ்தானின் பின்னணி இசை பேய் படத்திற்கான அக்மார்க் இசையாக இருக்கிறது.


 


எழுதி இயக்கியிருக்கும் செல்வ அன்பரசு, பேய் படத்தை காமெடியாக சொல்வதோடு, சினிமா கலைஞர்களின் வாழ்க்கையை குறிப்பாக முதல் படம் இயக்குபவர்களின் வலிகளை சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.


 


தனது படத்தில் இருக்கும் குறைகளையே கலாய்த்து காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர், பல இடங்களில் சினிமாவையே கலாய்த்து நக்கல் செய்து ரசிக்க வைக்கிறார்.


 


சிறிய பட்ஜெட் படம் என்றாலும் அதையும் ரசிக்கும்படி இயக்கியிருக்கும் இயக்குநர் செல்வ கணேஷ், இரண்டு மணி நேரம் எந்தவித அலுப்பும் தெரியாத வகையில் தான் சொல்ல வந்த கதையை மிக நேர்த்தியாகவும், ஜாலியாகவும் சொல்லியிருக்கிறார்.


 


மொத்தத்தில், ‘பேய காணோம்’ பயம் இல்லை என்றாலும் காமெடிக்கு முழு கேராண்டி.


Comments

Popular posts from this blog

டெரா இம்பல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (TERA IMPULSE PRIVATE LTD)

HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது

45% of India’s Electric Vehicle (EV) Sales comes from South India: Report