Posts

Showing posts from December, 2022

'காலேஜ்ரோடு' திரைப்பட விமர்சனம்

Image
 'காலேஜ்ரோடு' திரைப்பட ரேட்டிங்: 3.5/5 கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல..அது நம் உரிமை என்பதை கமர்சியல் கலந்து பேசியிருக்கிறது காலேஜ் ரோடு சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு புடித்துள்ள லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது படத்தின் திரைக்கதை. முதன்மை நாயகனாக லிங்கேஷ் இந்தப்படத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான மேலும் அழுத்தம் கொடுக்கிறது. நாயகியின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூர...

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஹென்றி தலைமையில் அமைச்சர்கள் முன்னிலையில் முப்பெரும் விழா.

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஹென்றி தலைமையில் அமைச்சர்கள் முன்னிலையில் முப்பெரும் விழா.

ஸ்டண்ட் யூனியன் சங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் "திரு.தவசி ராஜ்" மீண்டும் வெற்றி

Image
 ஸ்டண்ட் யூனியன் சங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் "திரு.தவசி ராஜ்" மீண்டும் வெற்றி தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் சங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் *திரு தவசி ராஜ்* அவரின் மொத்த வாக்குகள்:292, 14-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கொண்டாட்டத்தில் ஆரம்பித்து, கண்ணீரில் முடிந்த காலேஜ் ரோடு படம்.

Image
 கொண்டாட்டத்தில் ஆரம்பித்து, கண்ணீரில் முடிந்த காலேஜ் ரோடு படம். கொண்டாடி தீர்த்த கல்லூரி மாணவர்கள் காலேஜ் ரோடு படம் பார்த்து மாணவர்கள் கருத்து.. இயக்குனர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் தாண்டி இப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு விஷயத்தை பேசுகிறது.  பள்ளிப் படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்காக முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கல்விக் கடன் கிடைத்துவிடுவது இல்லை. ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்விக் கடன் பற்றியும் கல்விக் கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் கடன் வாங்கிய மாணவர்களை எப்படி நடத்துகிறது என்பதை பற்றியும் காலேஜ் ரோடு திரைப்படம் பேசுகிறது.  இந்த நிலையில் இப்படம் இன்று சென்னையில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.  படத்...

Navin’s and Sevalaya launch Toy Gifting Drive extending Happiness to kids from Orphanage.

Image
 *ஆதரவற்ற குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த சேவாலயாவுடன் கைகோர்க்கும் நவீன்’ஸ்* ––––– *குடியிருப்புவிளக்கத்தை சார்ந்த நூற்றுக்கும்  மேற்பட்ட குழந்தைகள் ஒன்றிணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசலித்தனர்* *சென்னை, டிச.27, 2022*– *ஆதரவற்ற குழந்தைகளின்* முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக புதியதோர் முயற்சியை சென்னையின் பிரபல கட்டுமான நிறுவனமான *நவீன்’ஸ்* முன்னெடுத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் *சேவாலயா* சமூக தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ‘உங்கள் பொம்மையை தாருங்கள் – மகிழ்ச்சியை பரிசளியுங்கள்’ என்னும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் மூலம் குழந்தைகளிடையே தாராள மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதமாக நூற்றுக்கும்  அதிகமான குழந்தைகள் அளித்த ஆயிரக்கணக்கான பொம்மைகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. *நவீன்’ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்* என்னும் நாவின்ஸ் இன் குடியிருப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் இக்குடியிர்ப்பில் இருக்கும் குழந்தைகளுடன் நாவின்ஸ் வைட் பெர்ரி,  நவீன் ஈடன் கார்டன் எனும் நாவின்ஸ் இந் மற்றும் பல அடுக்குமாடி...

’பேய காணோம்’ திரைப்பட விமர்சனம்

Image
 ’பேய காணோம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5 Casting : Selva Anbarasu, Gowsik, Sandhya Ramachandran, Godhandam, Jaya TV Jacob, VK Sundar Directed By : Selva Anbarasu Music By : Mr.Kolaru and Kathar Masthan Produced By : Theni Bharath and R.Surulivel   இயக்குநர் செல்வ அன்பரசன், நாயகன் கெளசிக், நாயகி சந்தியா ராமச்சந்திரன், இணை இயக்குநர் கோதண்டம் உள்ளிட்ட படக்குழுவினர் பேய் படம் எடுப்பதற்காக காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது மீரா மிதுன் வருகிறார். அவர் படக்குழுவினருக்கு பல உதவிகள் செய்கிறார். இதற்கிடையே, அங்கு நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களால் நாயகி பயந்து போக, படக்குழுவினர் சாமியாரை அழைத்து வருகிறார்கள்.    அந்த இடத்திற்கு வரும் சாமியார், படக்குழுவினருடன் இருக்கும் மீரா மிதுன் பெண் அல்ல பேய் என்ற உண்மையை சொல்வதோடு, அங்கிருந்து சென்றுவிடும்படி சொல்லிவிட்டு, அவரும் ஓடி விடுகிறார். பேய் படம் எடுக்க வந்து பேயிடம் சிக்கிக்கொண்ட படக்குழுவினர் படம் எடுத்தார்களா? அல்லது பேயிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதை க...

'ஜாஸ்பர்' திரைப்பட விமர்சனம்

Image
 'ஜாஸ்பர்'திரைப்பட ரேட்டிங்: 2.5/5 நிழலுக தாதாவாக இருக்கும் ஜாஸ்பர், தன் மனைவி கொல்லப்பட்டதும் அந்தத் தொழிலை விட்டு ஒதுங்கி வாழ்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கடத்தப்பட்டதும் மீண்டும் களமிறங்குகிறார். அது எதனால்? என்பதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் ஜாஸ்பர். தற்கால ஜாஸ்பர் வேடத்தில் சி.எம்.பாலாவும் இளவயது ஜாஸ்பராக விவேக்ராஜகோபாலும் நடித்திருக்கிறார்கள். இருவருமே உடல்மொழியில் ஆவேசத்தைக் காட்டி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.அவர் உடலில் இருக்கும் ஒரு நோயே அவரை சூப்பர்மேன் என்று ஆக்கிவிடுகிறது. அது திரைக்கதைக்கும் பலமாக அமைந்திருக்கிறது. ஐஸ்வர்யாதத்தாவின் வேடம் நன்று. அவருடைய மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.ஜாஸ்பரின் மருமகளாக நடித்திருக்கும் லாவண்யாவும் வேடத்தை உணர்ந்து அழுதுதீர்க்கிறார். மணிகண்டராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்கேற்ப அமைந்து இயக்குநருக்கு உறுதுணையாக இருக்கிறது. இசையமைத்திருக்கிறார் குமரன்சிவமணி. டிரம்ஸ் சிவமணியின் மகன். இந்தக் கதைக்குப் பின்னணி இசையின் தேவை அ...

'நெடுநீர்' திரைப்படம் விமர்சனம்

Image
 'நெடுநீர்' திரைப்பட ரேட்டிங்:3/5 குறைந்த முதலீட்டில் படம் இயக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முதலில் ஒரு வேண்டுகோள்.  இந்த நெடுநீர் படம் பல காட்சிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.  பருவ சிறுவனும், சிறுமியும் சூழலால துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது. எட்டு வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன். கடலின் அழகு, கடலின் ஆழம், கடலின் ஆர்ப்பரிப்பு, கடலின் மர்மம், கடலின் அமைதி,கடலின் பிரம்மாண்டம் இதுவே நெடுநீர். நாயகனாக நடித்த ராஜ் க்ரிஷ், கதாநாயகி இந்துஜா, முக்கியமான கதாபாத்திரத்தில் அண்ணாச்சியாக நடித்த முருகன் மற்றும் மோகன் எஸ் கே மின்னல் ராஜா அனைவரது நடிப்புமே நிச்சயமாக பேசப்படுவது உறுதி. இதற்கு அடுத்தபடியாக படத்தின் சண்டைக் காட்சியை நிச்சயமாக சொல்லியாக வேண்ட...

Lingesh plays the lead in College Road!

Image
 அன்று தமன்னாவோடு 'கல்லூரி' படத்தில் கதா நாயகனாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போனவர். இன்று " காலேஜ் ரோடு " படத்தின் மூலம் கதா நாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ். நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும்.  கதா நாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு படத்தில் அறிமுகமாகிறார். காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது . ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார்.  மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர் .   ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ் பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து , மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார்....

 சர்வதேச திரைப்பட விருதை வென்ற 'ஆதார்

Image
 சர்வதேச திரைப்பட விருதை வென்ற 'ஆதார்' சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை‌ நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில் வெளியான 'ஆதார்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி சசிகுமார் வழங்க, இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஆதார்'. எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம், வெளியாகி விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் 'ஆதார்' திரைப்படத்தை நடுவர்களும், பார்வையாளர்களும் கண்டு ரசித்து பாராட்டினர்.  இதனைத் தொடர்ந்து சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதிற்கு, 'ஆதார்...

Prime Video Releases a New Session of ‘Maitri: Female First Collective’; Dives Further into the Challenges Faced by Women in Entertainment

Image
 Prime Video Releases a New Session of ‘Maitri: Female First Collective’; Dives Further into the Challenges Faced by Women in Entertainment Features 9 strong women from Indian entertainment; from on-screen talent like Parvathy Thiruvothu and Rima Kallingal, and off-screen achievers like Indhu VS, Ratheena Plathottathil, Elahe Hiptoola, Shreya Dev Dube, Neha Parti Matiyani, to corporate leaders like Aparna Purohit and moderator Smriti Kiran As the year ends, participants ask the difficult questions and discuss mechanisms to make the industry more inclusive, create more opportunities for women, recognize their contribution and acknowledge their credit Prime Video also launches a dedicated social community for Maitri, making it easier for women in entertainment to connect, correspond and collaborate with each other. The episodic capsule of the latest session is now available on Maitri’s YouTube page MUMBAI, India – 23 December, 2022 – Prime Video, India’s most-loved entertainment dest...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்”

Image
 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்” சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.  முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.  ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன். இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் ...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

Image
 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  இவ்விழாவினில்  வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது…  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 வருடங்கள் இருக்கும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் பே...

திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் அட்லீ- பிரியா அட்லீ தம்பதி.

Image
 திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் அட்லீ- பிரியா அட்லீ தம்பதி. *மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அட்லீ & பிரியா அட்லீ* தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் "ஜவான் " படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.  இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொ...

The First Look of ‘Kaliyugam' – A Post-Apocalyptic Thriller is out now!!!

Image
 The First Look of ‘Kaliyugam' – A Post-Apocalyptic Thriller is out now!!! The first look of the Post-Apocalyptic thriller 'Kaliyugam', featuring actors Shraddha Srinath and Kishore in the lead, has now been released. Produced by Prime Cinemas proprietor KS Ramakrishna under the banner RK International Inc., the film has been directed by Pramodh Sundar. Actress Shraddha Srinath, consistently garnering phenomenal reception for her spellbinding performances in all her movies is playing the lead role in this movie. Actor Kishore plays a pivotal role in the film, which has cinematography by K Ramcharan. Nimz (Editing),  Sakthee Venkatraj M (Art), G.N. Murugan (Action), Dawn Vincent (Music & Sound Designing), Tapas Nayak (Sound Mixing), Praveen Raja (Costume Stylist) and S Raghunath Varma (Colorist) are the others in the technical crew.  The intriguing first look poster was designed by Sivakumar (Sivadigital Art), which encapsules the movie’s mood and theme with lot of in...

நடிகர் மேத்யூ தாமஸ் - நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் 'கிறிஸ்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
 நடிகர் மேத்யூ தாமஸ் - நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் 'கிறிஸ்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு *காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் 'கிறிஸ்டி'* 'பேட்ட', 'மாஸ்டர்' படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிறிஸ்டி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.  அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிறிஸ்டி'. இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எ...

’புரொஜக்ட் சி - சாப்டர் 2’ திரைப்பட விமர்சனம்

Image
 ’புரொஜக்ட் சி - சாப்டர் 2’ திரைப்பட ரேட்டிங்: 3/5 நாயகன் ஸ்ரீ படித்தும் வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். அதனால் கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத நபரை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது. அதன்படி அந்த வீட்டில் தங்கி வேலை செய்யும் அவர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர் விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த மருந்தை பல லட்சம் கொடுத்து வாங்க பலர் தயாராக இருப்பதையும் அறிந்துக்கொள்கிறார். பிறகு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி அதை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். [embed]https://youtu.be/yfg-MH_FLVg[/embed] இதற்கிடையே, ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை அபகறிக்க, அதே வீட்டில் வீட்டு வேலை செய்யும் வசுதா கிருஷ்ணமூர்த்தி திட்டமிடுகிறார். மறுபக்கம் விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்ஸ் திட்டமிடுகிறார். இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீ உயிருக்கு பயந்து அனைத்தையும் அவர்களிடம் கொடுக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’. ...

'என்ஜாய்'திரைப்பட விமர்சனம்

Image
  'என்ஜாய்'திரைப்பட ரேட்டிங்: 3/5 முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘என்ஜாய்’. டைட்டிலுக்கு ஏற்றபடி இரண்டு மணி நேரமும் படம் பார்ப்பவர்களை என்ஜாய் பண்ண வைத்துள்ளதா இந்த படம் ? பார்க்கலாம். திரையரங்குகளில்!📢 #ENJOY 😍 #EnjoyTheMovie @kkperumalkasi1 @KMRayan61 @saidhanyaa97 @chweetsathish @Viveka_Lyrics @IndravathiChauh @lnh_creation @TimesMusicSouth @pro_guna [embed]https://youtu.be/62Yk8sr6nu8[/embed] ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள். அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் நட்பாகிறார்கள். ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின். காதலி இருந்தாலும், சின்னச்சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க...