Apollo Children’s Hospitals launched India’s first Paediatric Liaison Psychiatry Department
Apollo Children’s Hospitals launched India’s first Paediatric Liaison Psychiatry Department
Chennai, November 14 2022: Apollo Children’s Hospital, a part of Apollo Hospitals Group, one of Asia’s largest integrated healthcare providers, launched the Apollo Paediatric Psychiatry Liaison & Education department (APPLE), India’s first Paediatric Liaison Psychiatry Department in Chennai. The department was inaugurated by B.Priyanka Pankajam IAS., Executive Director Tamil Nadu Corporation for Development of Women in the presence of Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group, Ms. Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group and Ms. Gouri G Kishan, Popular Cine Artist. As a part of the event Master AR Illamparuthi, Under 14 world Youth Chess Champion was honoured and felicitated for his achievements.
The unique aspect of the department of ‘APPLE’ – Apollo Paediatric Pychiatry Liaison & Education is the presence of a Liaison Psychiatrist in the entire treatment process of paediatric patients, who would focus on the various mind-related issues while the body of a child heals. Moreover, it also focusses on many conditions which do not have a physiological or pathological reasoning which could be attributed to mental well-being.
Speaking during the inauguration, Ms. Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group said, “Good health and wellbeing are holistic in nature involving the mind and the body. When it comes to treating illnesses, we often focus on the body and underestimate the importance of mental wellbeing in the process of healing. Conventionally, this aspect is left to the family to deal with, which is extremely hard especially when the child is going through an illness. It’s for this reason, Apollo Children’s Hospitals is launching a one-of-its-kind Paediatric Liason Psychiatry Department. We are extremely happy to launch this novel department on Children’s Day”
With the launch of this department, a Liaison Psychiatrist would interact and assess the patients along with the primary paediatrician and super specialists. The result of this assessment is that, the treatment plan would be amended to include the mental well-being of the child. The Psychiatrist would thereby be the bridge between the patient and the primary physician.
The Liaison Psychiatrist would also counsel the parents and help them deal with their child’s illnesses better. This is especially crucial in long term illnesses, highly critical illnesses which require intensive care etc. Examples of these issues could be children dealing with missed classes / schooling, how parents would need to deal with their official responsibilities, personal commitments and treatment of their child etc.
The Liaison Psychiatrist would also be training nurses and other staff members to interact with patients with empathy and sensitivity depending on their illness. This would reduce friction during their interaction with the child and their parents and would aid in improving their experience during their hospital stay. This new perspective to healing would benefit patients, parents and staff members thereby accelerating healing and result in managing long term and critical illnesses better.
The event also featured cultural and entertainment activities including an act where children were dressed up as doctors, nurses and admin staff and walked around the hospital. The children got a feel of running the hospital on their special day. Children who fought back to life after being critically ill were also part of the event. The CSR activities done by Apollo Children’s Hospitals were also on display during the event.
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை இந்தியாவிலேயே முதலாவதாக, குழந்தைகள்
மருத்துவத்துடன் தொடர்புடைய மனநலப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது
சென்னை, நவம்பர் 14 2022: ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்பு
நிறுவனங்களில் ஒன்றான அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான அப்போலோ
குழந்தைகள் மருத்துவமனை, இந்தியாவின் முதலாவது குழந்தைகள் மருத்துவத்துடன் தொடர்புடைய
மனநலம் மற்றும் கல்வித் பிரிவைச் (Apollo Paediatric Psychiatry Liaison & Education department
(APPLE), India’s first Paediatric Liaison Psychiatry Department in Chennai) சென்னையில்
தொடங்கியுள்ளது. அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் செயல் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி [Ms
Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group] , அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின்
நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி [Ms Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group]
மற்றும் பிரபல திரைப்படக் கலைஞர் கௌரி ஜி கிஷன் [Ms. Gouri G Kishan, Popular Cine Artist]
ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பி.பிரியங்கா
பங்கஜம் ஐஏஎஸ் [by B.Priyanka Pankajam IAS., Executive Director Tamil Nadu Corporation for
Development of Women] இந்தப் பிரிவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 14
வயதுக்குட்பட்ட பிரிவில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் மாஸ்டர் ஏ.ஆர். இளம் பரிதி
[Master AR Illamparuthi, Under 14 world Youth Chess Champion] அவரது சாதனைகளுக்காக
பாராட்டப்பட்டார்.
'ஆப்பிள்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் அப்போலோ குழந்தைகள் மருத்துவத்துடன்
தொடர்புடைய மனநலம் மற்றும் கல்விப் பிரிவு அல்லது துறையின் தனித்துவமான அம்சம்
என்னவென்றால் குழந்தை நோயாளிகளின் முழு சிகிச்சை செயல்முறையிலும் அது தொடர்பான மனநல
மருத்துவரை ஈடுபடுத்துவது ஆகும். அந்த மருத்துவர் குழந்தையின் உடல்நிலை குணமடையும்போது
பல்வேறு மனம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார். மேலும், இது மன நலத்திற்குக்
காரணமாகக் கூறப்படும் உடலியல் அல்லது நோயியல் தொடர்பாக ஆய்வு செய்யப்படாத பல
நிலைகளிலும் கவனம் செலுத்துகிறது.
இந்தத் துறையின் தொடக்க விழாவில் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின்
நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, (Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group)
"பொதுவாக நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்பது மனதையும் உடலையும் உள்ளடக்கிய
முழுமையான அம்சம் ஆகும். நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் போது, நாம் அடிக்கடி உடல் தொடர்பான
அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் குணப்படுத்தும் செயல்பாட்டில் மன ஆரோக்கியத்தின்
முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம். வழக்கமாக, இந்த அம்சம் குடும்பம் தொடர்புடையதாக
பார்க்கப்படுகிறது. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப்படும்போது இது மிகவும் சிக்கலானதாக அமைகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, அதன் ஒரு பிரிவாக குழந்தை
மருத்துவத்துடன் தொடர்புடைய மனநலப் பிரிவைத் தொடங்குகியுள்ளது. குழந்தைகள் தினத்தில் இந்தப்
புதிய பிரிவைத் தொடங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
இந்தப் பிரிவு (துறை) தொடங்கப்பட்டதன் மூலம், ஒரு தொடர்பு மனநல மருத்துவர் (Liaison
Psychiatrist), முதன்மை குழந்தை மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர்களுடன் இணைந்து நோயாளிகளை
மதிப்பீடு செய்வார். இந்த மதிப்பீட்டின் விளைவாக, குழந்தையின் மன நலனை உள்ளடக்கியதாக சிகிச்சை
முறை மாற்றி அமைக்கப்படும். மனநல மருத்துவர், நோயாளிக்கும் முதன்மை மருத்துவருக்கும் இடையே
பாலமாக இருப்பார்.தொடர்பு மனநல மருத்துவர் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவதுடன் குழந்தையின்
நோய்களை சிறப்பாக சமாளித்து அதில் இருந்து வெளிவர உதவுவார். நீண்ட கால நோய்கள், தீவிர
சிகிச்சை தேவைப்படும் மிகவும் ஆபத்தான நோய்கள் போன்றவற்றில் இந்த மனநல அம்சம் மிகவும்
முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக, தவறவிட்ட பள்ளி வகுப்புகள், பெற்றோர்கள் தங்கள்
பொறுப்புகளை எவ்வாறு கையாள வேண்டும், தனிப்பட்ட கடமைகள் மற்றும் தங்கள் குழந்தையை
நடத்துவது போன்ற சிக்கல்கள் இதில் வரும். இந்த சிறப்புப் பிரிவின் மூலம் இது போன்ற பல்வேறு
சிக்கல்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
தொடர்பு மனநல மருத்துவராக செயல்படுபவர், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு
நோயாளிகளின் நோயைப் பொறுத்து கருணையுடன் அவர்களைத் தொடர்பு கொள்ளும் விதம் குறித்துப்
பயிற்சி அளிப்பார். இது குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொள்ளும்போது
ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கும். அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது அவர்களின்
அனுபவத்தை மேம்படுத்த உதவும். குணப்படுத்துவதற்கான இந்த புதிய முற்போக்குத் திட்டம்,
நோயாளிகள், பெற்றோர் மற்றும் பணியாளர்களுக்கு பயனளிக்கும். இது குணப்படுத்தும் கால அளவை
விரைவுபடுத்துவதுடன் நீண்ட கால மற்றும் சிக்கலான நோய்களைச் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள்
போல் குழந்தைகள் உடையணிந்து மருத்துவமனையை பார்வையிடும் ஒரு செயல்பாடு, கலாச்சார மற்றும்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதன் மூலம் குழந்தைகள் தங்களுக்கான சிறப்பு நாளில்
மருத்துவமனையை நிர்வகிப்பதுபோன்ற உணர்வைப் பெற்றனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்து
உயிருக்கு போராடி சிகிச்சைக்குப் பின் மீண்ட குழந்தைகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் பெருநிறுவன பொறுப்புணர்வுத் திட்ட (CSR)
செயல்பாடுகளும் இந்த நிகழ்ச்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டன.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம் பற்றி….:
சென்னையில் 1983-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை முதன்முதலாக
டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய மற்றும்
மிக நம்பகமான மருத்துவ குழும்மாக அப்போலோ குழுமம் திகழ்கிறது. தற்போது 72
மருத்துவமனைகளில் 12000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 4100 மருந்தகங்கள்,
120 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 650 பரிசோதனைக் கூடங்களும் உள்ளன.
700 க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் [Teleclinics] உள்ளன. 15-க்கும்
மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை
ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள்,
ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன
மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. ஆசியா,ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான்
சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது.
ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10
லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம்
அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது
அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம்
கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப்
ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி
கவுரவித்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த
சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ முன்னணி வகிக்கிறது. அப்போலோ குழுமம்
உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு https://www.apollohospitals.com/ என்ற
இணையதளத்தைப் பார்க்கவும்.
For more information please contact: APOLLO HOSPITALS: Suganthy - 9841714433
ADFACTORS PR| Sricharan - 9842904567 | Jay S - 9940424386
Comments
Post a Comment