தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் கற்று 'பேய் கொட்டு'(PEI KOTTU) படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் S.லாவண்யா (Director S. Lavanya
தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் கற்று 'பேய் கொட்டு'(PEI KOTTU) படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் S.லாவண்யா (Director S. Lavanya) தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. இதுவரை தமிழ் திரையுலகில் 'அஷ்டவதானி', 'தசாவதானி' போன்ற சாதனையாளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முறையாக திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, 'பேய் கொட்டு'(PEI KOTTU)எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான லாவண்யா. இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து உருவாக்கி இருக்கிறேன். மொத்தம் 31 துறைகளில் இப்படத்திற்காக அயராது உழைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், ப...