கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 தொடர்கள்- பேரழகி 2 மற்றும் அர்ச்சனைப் பூக்கள்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 தொடர்கள்- பேரழகி 2 மற்றும் அர்ச்சனைப் பூக்கள் ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சென்னை, ஜூன் 28, 2023: வயாகாம் 18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தற்போது புதிய 2 தொடர்களை சின்னத்திரைக்குக் கொண்டு வருகிறது. விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான பிணைப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பேரழகி 2, அர்ச்சனைப் பூக்கள் - இரு சகோதரிகளின் கதை ஆகிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த இரண்டும் கன்னடத்தில் ஹிட்டான லக்சனா மற்றும் பாக்யலஷ்மி ஆகிய தொடர்களின் டப்பிங் வெர்ஷனாகும். இந்த 2 தொடர்புகளும் ஜூலை 3-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளன. பேரழகி 2 தொடரானது நக் ஷத்ரா(நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார் மற்றும் ஸ்வேதா(சுக்ருதா நாக் நடித்துள்ளார்) ஆகிய 2 பெண்களைச் ...