தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் - ன் திட்ட இயக்குநர் திரு எம் கோவிந்த ராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் CMCHIS, இணை இயக்குனர் - மருத்துவ அறிவியல் ,டாக்டர் ரவி பாபு மாவட்ட வருவாய் அலுவலர் திரு மோகன் சந்திரன் மற்றும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் செயலாக்கத் துணைத்தலைவர் டாக்டர். ப்ரீதா ரெட்டி ஆகியோரோடு TNCMCHIS கீழ் தலசீமியாவுக்கு சிகிச்சை பெற்ற பயனாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரில் இரத்த அழிவுச்சோகையால் (தலசீமியா) பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு வெற்றிகர சிகிச்சை தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் (TNCMCHIS) எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைப்பை மேற்கொண்ட முதல் தனியார் மருத்துவமனை என்ற பெருமை அப்போலோ கேன்சர் சென்டருக்கு உரியது. தலசீமியா மேஜர் (பெருந் தலசச்சோகை) பாதிப்புக்காக மிக உயர்ந்த எண்ணிக்கையில் ஹாப்லோ ஒரே மாதிரியான உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்த சாதனை பதிவை இம்மருத்துவமனை கொண்டிருக்கிறது மற்றும் இந்நோயாளிகளுள் 50%-க்கும் அதிகமானவர்கள் (TNCMCHIS) வழியாக சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள். பெருந் தலசச்சோகையால் பாதிக்கப்பட்டு TNCMCHIS திட்டத்தின்கீழ் பலன் பெற்ற நோயாளிகளுள் 11 மாதமே நிரம்பிய குழந்தையிலிருந்து 22 ஆண்டுகள் வயதுள்ள இளைஞர்கள் வரை இடம்பெற்றிருக்கின்றனர். சென்னை, 2023, மே 31 : உலக தலசீமியா மாதத்தை அனுசரிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சரின் விரி...